`தொடங்கி பத்து நாள் கூட ஆகாத கம்பெனிக்கு அறுபதாயிரம் கோடி கான்ட்ராக்ட்!’ – கார்த்தி சிதம்பரம்

0 10

ரஃபேல் விமானம் வாங்கியதில் மோடி அரசு ஊழல் செய்துள்ளதாக கூறி வருகிறது காங்கிரஸ் கட்சி ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து கார்த்தி சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிவகங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இப்போராட்டமானது அண்ணா சிலையிலிருந்து தொடங்கி ஊர்வலமாக வந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது அதன் பிறகு மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் மணிகண்டனிடம் மனு கொடுத்தார் கார்த்தி சிதம்பரம்அதன்பிறகு ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து கார்த்தி சிதம்பரம் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது “ரஃபேல் விமானம் பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கியதில் மோடியின் அரசு ஊழல் செய்துள்ளது போர் விமானங்களைப் பழுதுபார்க்கும் பொறுப்பு பெங்களூர் ஹிந்துஸ்தான் பொதுத்துறை நிறுவனம்தான் செய்து வருகிறது அனைத்து போர் விமானங்களையும் பராமரிக்கிற பழுதுபார்க்கிற பொறுப்பு அரசு பொதுத்துறை பொறுப்பாகும் ஆனால் பிரான்ஸ் ரஃபேல் போர் விமானத்துக்கு மட்டும் பழுது பார்க்கிற பராமரிக்கிற பொறுப்பு ரிலையன்ஸ் கம்பெனியிடம் ஒப்படைத்திருப்பது பெரும் ஊழலாகும் அதாவது ரிலையன்ஸ் கம்பெனி விமானங்களைப் பழுது பார்க்கிற ஒர்க்ஷாப் தொடங்கி பத்துநாள்கூட ஆகவில்லை பத்து நாளைக்கு முன்பு தொடங்கப்பட்ட கம்பெனிக்கு அறுபதாயிரம் கோடிக்கு கான்டிராக்ட் கொடுக்கப்பட்டுள்ளது இரண்டிலும் முறைகேடு ஊழல் அமோகமாக நடந்துள்ளது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவே காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது மோடி அரசின் ஊழல் பற்றி பத்திரிகைகள் செய்தி வெளியிட அஞ்சுகிறார்கள் என்றார்

Leave A Reply

Your email address will not be published.