`ஆங்கிலம் ஒரு `நோய்’; இந்திதான் எல்லாமே..!’ – கடுகடுத்த வெங்கைய நாயுடு

0 9

 இந்தி கற்றுக்கொள்ளாமல் இந்தியாவில் முன்னேற முடியாது எனத் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்  டெல்லியில் இந்த ஆண்டுக்கான தேசிய இந்தி திவாஸ் (Hindi Diwas Samaroh-2018) நிகழ்வு இன்று நடந்தது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி திவாஸ் தினமாக அனுசரிக்கப்படுவது வழக்கம் இந்தி மொழியை வளர்ப்பதே இந்த தினம் அனுசரிக்கப்படுவதின் நோக்கம் இந்த ஆண்டுக்கான இந்தி திவாஸ் சிறப்பு நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது  துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்குபெற்றனர் விழாவில் பேசிய வெங்கைய நாயுடு ஆங்கில மொழி குறித்து காட்டமான கருத்துகளை கூறினார் ‘என் பள்ளிப் பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் நான் கலந்துகொண்டேன் ஆனால் வளர வளர  இந்தி மொழியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டேன் இந்தியாவில் இந்தி கற்றுக்கொள்ளாமல் படிக்காமல் முன்னேறவே முடியாது என்பதை உணர்ந்துகொண்டேன் நான் டெல்லிக்கு வந்த புதிதில் அறைகுறையாகதான் இந்தியில் பேசினேன் ஆனாலும் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள் `ஆங்கிலம் என்னும் மொழி இந்தியாவில் ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற ஒரு `நோய்’  அனைவரும் இந்தி கற்க வேண்டும்’ என்று பேசினார்அவரைத் தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் `இந்திய மக்கள் நம் தாய் மொழியை மறந்துவிடக் கூடாது சீன அதிபர் இந்தியா வந்தபோது அவரின் தாய் மொழியில்தான் பேசினார் இரானியன் பிரதமர் இந்தியா வந்தபோதும் அவர் தன் தாய் மொழியில்தான் பேசினார் இத்தனைக்கும் அவர் ஆங்கில மொழியில் பிஹெச்டி பட்டம் பெற்றவர் இந்தி என்பது மொழியல்ல நம் நாட்டில் உள்ள மாநிலங்களை இணைக்கும் பாலம்’ என்றார்இந்தி தெரிந்தால்தான் இந்தியாவில் முன்னேற முடியும் என்று வெங்கைய நாயுடு பேசியதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன

Leave A Reply

Your email address will not be published.