`தெரியாமல்தான் கேட்கிறேன்; என் மீது இவ்வளவு பாசமா?’ – தங்க தமிழ்ச்செல்வன் கலகல

0 10

“ஒன்றரை வருடங்களாக தங்க தமிழ்ச்செல்வனைப் பற்றி பேசாமல் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் இவ்வளவு பாசம் விட்டால் எல்லா அமைச்சர்களும் என்னை அழைப்பார்கள் போலிருக்கிறதே என்று கிண்டலாகப் பதிலளித்தார் தங்க தமிழ்ச்செல்வன்அமமுக-வின் கொள்கைப்பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனை அதிமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக அதிமுக-வுக்கு அழைத்துக்கொண்டிருப்பது தமிழக அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது அமைச்சர் கடம்பூர் ராஜு “தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக-வில் சேர்வதற்கு தூது விடுகிறார் என்றார் அதைத்தொடர்ந்து இன்று காலை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போது தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக-வுக்கு வந்தால் மகிழ்ச்சி என்றார்இதுதொடர்பாக புதுக்கோட்டை சென்றுகொண்டிருந்த தங்க தமிழ்ச்செல்வனிடம் போனில் பேசினோம் “திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக-வை அமமுக தோற்கடிக்கும் நான் சவால் விடுகிறேன் அப்படி தோற்கடித்துவிட்டால் கட்சியையும் சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைத்துவிட்டு முக்கிய நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் இந்தச் சவாலுக்கு முதலில் பதில் சொல்லுங்கள் அதிமுக-வில் இணைவதற்கு மொட்டைக் கிணற்றில் விழுந்துவிடலாம் ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன் என் மீது இவ்வளவு பாசமா ஒன்றரை வருடங்களாக  தங்க தமிழ்ச்செல்வனைப் பற்றி பேசாமல் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் இவ்வளவு பாசம் விட்டால் எல்லா அமைச்சர்களும் என்னை அழைப்பார்கள் போலிருக்கிறதே என்று கிண்டலாகப் பதிலளித்தார்தேனியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை நீங்கள்தான் பயன்படுத்தி வருகிறீர்கள் தற்போது அதை அதிமுக அலுவலகம் என்று சொல்வதா அமமுக அலுவலகம் என்று சொல்வதா என்று கேள்வி எழுப்பினோம் “தற்போது அது அமமுக தலைமை அலுவலகம் விரைவில் அதிமுக அலுவலகமாக மாறும் என்றார்

Leave A Reply

Your email address will not be published.