7 பேர் விடுதலை விவகாரம் – ஏன் இப்படிச் செய்தார் ஆளுநர்?

0 10

`முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலைக் குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம்39 என்று நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அண்மையில் தீர்ப்பளித்தது இதையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது கூட்டத்தின் முடிவில் சிறை அதிகாரிகளின் பரிந்துரைகள் வழக்கில் இத்தனை காலமாக நிகழ்ந்தவை உள்ளிட்டவை அடங்கிய கோப்புகள் அமைச்சரவையின் தீர்மானம் சட்டவிதி 161-ன் படியிலான கருணை மனு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு தமிழக ஆளுநரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இந்த நிலையில் 7 பேர் விடுதலைத் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆளுநர் கருத்து கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன உள்துறை அமைச்சகத்திடம் ஆளுநர் கருத்து கேட்டிருப்பது சரியா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது இதுகுறித்து சட்டபூர்வமான விளக்கத்தைக் கொடுத்திருக்கும் வழக்கறிஞர் விஜயன் “சாதாரணமாக எந்த வழக்கிலும் விதி 161-ன் அடிப்படையில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் எவ்வித மறுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் கொடுக்கவேண்டும் ஆனால் 7 பேர் வழக்கில் மாநில அரசிடம் கருணை கோரிக்கை முன்வைக்கப்பட்ட பிறகு மத்திய அரசிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது இப்படியான இணைக்கப்பட்ட அதிகாரவரம்பில் (Concurrent Jurisdiction) மேல்நிலை அதிகாரமே முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளப்படும் அண்மையில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு கிடையாது என்று கூறியது `நீண்டகாலமாகத் தமிழக அரசிடம் இருக்கும் ஒரு மனுவின் மீதான முடிவை அவர்கள் எடுக்கலாம்39 என்று அந்த அமர்வு கூறியிருந்தது ஆனால் குடியரசுத் தலைவர் ஏற்கெனவே இந்த விவகாரத்தில் மனுவை நிராகரித்ததை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் ஆளுநரையும் குடியரசுத் தலைவரையும் ஒப்பிடுகையில் குடியரசுத் தலைவரே மேல்நிலை அதிகாரம் அவரும் உள்துறை அமைச்சகத்தின் கருத்தின் அடிப்படையில்தான் மனுவை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது அதனால் ஆளுநர் இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டிருப்பதில் தவறேதுமில்லை” என்று முடித்தார் ஆனால் 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் தரப்பில் இந்த விவகாரத்தில் தற்போது மேலும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது `குடியரசுத் தலைவர் எந்த அடிப்படையில் மனுவை நிராகரிக்கும் முடிவை எடுத்தார்39 என்று பேரறிவாளன் தரப்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அண்மையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது ஆனால் பேரறிவாளன் கேட்ட கேள்விகளுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்த கடிதம் எதுவும் குடியரசுத் தலைவரின் பார்வைக்கு வரவில்லை என்றும் அவர்கள் தரப்பு அதில் குறிப்பிட்டிருந்தனர் அதனால் “7 பேரின் விடுதலையை நிராகரிக்கும் உத்தரவு குடியரசுத் தலைவருக்குத் தெரியாமல் அவரது பேரிலேயே உள்துறை அமைச்சகம் வெளியிட்டது அப்படி இருக்கும் நிலையில் அதை குடியரசுத் தலைவரின் முடிவாகவும் மேல்நிலை அதிகாரத்தின் முடிவாகவும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஆளுநர் இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டிருக்கும் நிலையில் அவர்களது விளக்கத்தைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளனர் பலவருட காலமாக எவ்வித முடிவையும் எட்டாமல் இருக்கும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் விரைவில் முடிவு கிடைத்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் ஆளுநரின் இந்த நடவடிக்கை அந்த எதிர்பார்ப்புக்குச் சற்று பின்னடைவாகத் தற்போது அமைந்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.