சென்னையில் சிறப்பு நீதிமன்றம்…. ‘கிலி’யில் 75 குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-க்கள்!

0 9

`தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் போட்டார் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது `குற்றப் பின்னணி கொண்ட எம்பி எம்எல்ஏ-களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’ எனக் கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டது இதன்பிறகு இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது `குற்றப் பின்னணி மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் இதில் இரண்டு நீதிமன்றங்கள் 228 எம்பி-க்கள் தொடர்பான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் 65-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ள தமிழ்நாடு ஆந்திரா பீகார் கர்நாடகா கேரளா மத்தியபிரதேசம் மராட்டியம் தெலங்கானா உத்தரபிரதேசம் மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநிலங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க 780 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது39 என மத்திய அரசு தெரிவித்தது  `நீண்ட காலமாக எம்பி மற்றும் எம்எல்ஏ-கள் மீது நிலுவையில் உள்ள 1581 வழக்குகளை இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் ஓர் ஆண்டுக்குள் விசாரித்துத் தீர்ப்பு அளிக்க வேண்டும் இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் மார்ச் 1-ம் தேதி முதல் செயல்பட வேண்டும்39 என சுப்ரீம் கோர்ட் டிசம்பரில் உத்தரவு போட்டது  அதிமுக எம்எல்ஏ-கள் 28 பேர் மீதும் திமுக எம்எல்ஏ-கள் 42 பேர் மீதும் குற்ற வழக்குகள் இருக்கின்றன மாவட்டங்களில் மந்த கதியில் நடைபெறும் இந்த வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டால் விரைந்து முடிக்கப்படும் அதனால் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது தமிழக அரசு மற்ற மாநிலங்களிலும் தனி நீதிமன்றங்கள் அமைப்பதிலும் வழக்குகளை ஒதுக்குவதிலும் தாமதம் ஏற்பட்டது இந்த நிலையில் வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் பிரமாணபத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தது அதில் `மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க 11 மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன தமிழகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் அந்தஸ்து குறிப்பிடப்படவில்லை39 எனத் தெரிவித்திருக்கிறது `சிறப்பு நீதிமன்றத்துக்கு 1233 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன இதில் 136 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன 1097 வழக்குகள் நிலுவையில் உள்ளன’ எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது  வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் எம்பி எம்எல்ஏ-க்கள் மீதான நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் குறித்து தகவல்களை அக்டோபர் 10-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்கள் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கு உத்தரவிட்டது சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட வேண்டிய வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் சொன்னது  இப்படியான சூழலில்தான் தனி நீதிமன்றத்தை அமைப்பதில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை மற்ற மாநிலங்கள் சிலவற்றில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு வழக்குகள் மாற்றப்பட்டிருக்கின்றன ஆனால் தமிழகத்தில் தனி நீதிமன்றம் அமைக்காமல் இருந்தார்கள் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசின் உள் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி தனி நீதிமன்றம் அமைக்கப்படும் எனக் கடந்த 6-ம் தேதி அரசிதழ் வெளியிட்டிருக்கிறார் கடந்த ஆண்டு நவம்பரிலும் டிசம்பரிலும் சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவுக்கு இப்போதுதான் செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள்1991-1996 அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களை விசாரிப்பதற்காகத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன அந்த நீதிமன்றங்கள் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டன அதே இடத்தில்தான் இந்தச் சிறப்பு நீதிமன்றமும் அமையும் எனத் தெரிகிறது இதுபற்றி இறுதி முடிவைச் சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் எடுக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியையும் முடிவு செய்வார்கள் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்படும் வழக்கு விவரங்களைத் தரச் சொல்லி அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கும் நிலையில் இந்த நடைமுறைகள் விரைவில் தொடங்கும் சிறப்பு நீதிமன்றம் உடனே அமைக்கப்படுவதோடு எம்எல்ஏ-கள் மீது மாவட்டங்களில் உள்ள வழக்குகள் இங்கே மாற்றப்படும் இந்த விவரங்கள் அனைத்து அக்டோபர் 10-ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் 2016 சட்டசபைத் தேர்தலில் ஜெயித்த 232 எம்எல்ஏ-க்களில் 75 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் இதில் கருணாநிதி ஜெயலலிதா இப்போது உயிருடன் இல்லை இடைத் தேர்தலில் வென்ற டிடிவி தினகரன் மீது ஐந்து வழக்குகள் இருக்கின்றன மொத்தம் 74 எம்எல்ஏ-கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கப் போகிறது இவர்களில் 42 பேர் மீது கொலை கொலை முயற்சி கடத்தல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என சீரியஸ் வழக்குகள் இருக்கின்றன குற்றப் பின்னணி எம்எல்ஏ-களில் 27 பேர் அதிமுக-வினர் 42 பேர் திமுக-வினர் 5 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்

Leave A Reply

Your email address will not be published.