‘உண்மையான காங்கிரஸ்காரரா?” vs ‘’அனைவரும் ஆதரிக்கிறார்கள்!’’ கோபண்ணா vs ’கராத்தே’ தியாகராஜன்

0 14

39காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டங்களில் திமுக முழு ஆர்வத்தோடு பங்கேற்பதில்லை39 என்று கராத்தே தியாகராஜன் பற்றவைத்த நெருப்பு இன்னும் கொழுந்துவிட்டு எரிகிறதுபெட்ரோல் – டீசல் விலை உயர்வை எதிர்த்து அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தியது சென்னையில் நடைபெற்றப் போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியோடு அதன் தோழமைக் கட்சியினரும் திரளாகப் போராட்டத்தில் பங்கேற்றனர் போராட்டம் குறித்துப் பேசிய தென் சென்னை மாவட்டச் செயலாளர் கராத்தே தியாகராஜன் 3939திமுக நடத்தும் போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்கின்றனர் ஆனால் காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களில் திமுக-வின் மாவட்டச் செயலாளர்கள் எம்எல்ஏ-க்கள் போன்றோர்கூட கலந்துகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது3939 என்றார் இதைத்தொடர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்ட திமுக-வினர் தியாகராஜனின் பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்து கோஷமிட்டனர் மேலும் கராத்தே தியாகராஜன் பேச்சை நிறுத்தக்கோரி மேடையை நோக்கி திமுக தொண்டர்கள் முண்டியடித்தனர் இந்த சலசலப்பினால் போராட்டக்களம் பதற்றமாகியது பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலர் கூட்டத்தினரை சமாதானம் செய்ததையடுத்து பிரச்னை சுமுகமானது இந்நிலையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கோபண்ணா இப்பிரச்னை குறித்துப் பேசியபோது 3939திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையிலான கூட்டணி என்பது நீண்ட நெடிய தொடர்புடையது எந்த சலசலப்புகளாலும் இந்தக் கூட்டணியைக் கலைக்க முடியாது தமிழகத்தின் நாளைய தலைவிதியை நிர்ணயிக்கப்போவதே இந்தக் கூட்டணிதான் ஆனால் இந்தக் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடே கராத்தே தியாகராஜன் அவ்வாறு பேசியிருக்கிறார் அவருடையப் பேச்சின் பின்னணி குறித்தெல்லாம் இப்போது நான் விரிவாகப் பேச விரும்பவில்லை ஆனால் எல்லாவற்றையும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்3939 என்றார் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிரும் புதிருமாக வெளிப்பட்ட இந்தக் கருத்து தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் கோபண்ணாவின் கருத்து குறித்து கராத்தே தியாகராஜனிடம் பேசினோம்3939காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களது ஆதங்கத்தைத்தான் நான் அன்றைக்குப் பிரதிபலித்தேன் எனது பேச்சுக்கு கட்சியினர் அனைவருமே பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள் மற்றபடி நான் பேசியது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் ஏதேனும் சொல்லியிருந்தால் அதற்கு நானும் பதில் சொல்லலாம் அதைவிடுத்து கோபண்ணாவுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியுமா கோபண்ணா மீதே கட்சி ரீதியாக நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன அதையெல்லாம் முதலில் அவர் சரிசெய்து உண்மையான காங்கிரஸ் கட்சிக்காரன் என்று நிரூபிக்கட்டும் அதன்பிறகு என் கருத்தை அவர் விமர்சிக்கட்டும்3939 என்றார் ரைமிங்காக கராத்தே தியாகராஜன் கருத்து குறித்து கோபண்ணாவிடம் விளக்கம் கேட்டோம் 3939 39அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து நடத்திய போராட்டக் கூட்டத்தின்போது கராத்தே தியாகராஜன் இப்படியொரு கருத்தை வெளியிட்டது தவறு அதில் உள்நோக்கம் இருக்கிறது39 என்று அன்றைய நிகழ்வைப் பற்றி மட்டும்தான் நான் பேசினேன் எனவே நான் தெரிவித்தக் கருத்துக்கு மட்டுமே அவர் பதில் சொல்லவேண்டும் அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் என்னைப் பற்றித் தனிமனிதத் தாக்குதல் தொடுக்கக்கூடாது அப்படித் தொடுத்தால் பதிலுக்கு நானும் அதைச் செய்யவேண்டியிருக்கும்39ரஜினிக்கு நெருக்கமானவராகக் காட்டிக்கொள்ளும் கராத்தே தியாகராஜனை நம்பமுடியாது எந்நேரத்திலும் ரஜினி கட்சி ஆரம்பித்தவுடன் அதில் இணைந்துவிடுவார்39 என்ற சந்தேகம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலேயே இருக்கிறது எனவே 39தான் காங்கிரஸ்காரன்39 என்பதைக் கராத்தே தியாகராஜன் முதலில் நிரூபிக்கட்டும்3939 என்றார் பதிலடியாக

Leave A Reply

Your email address will not be published.