அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும்; விலகினால் சாமி கூட சாணமாக மாறும் : செல்லூர் ராஜு

0 13

மதுரை: தேர்தல் வரும் போது டிடிவி தினகரனிடம் இருக்கும் தொண்டர்கள் எல்லோரும் அதிமுகவிற்கு திரும்பி வந்துவிடுவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக அ.ம.மு.க. கட்சியை ஒரு அமைப்பாக கூட கருத முடியவில்லை என்றும் செல்லூர் ராஜு கூறியுள்ளார். அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை இருக்கும் பக்கமே இருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செல்லூர் ராஜு அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும்; விலகினால் சாமி கூட சாணமாக மாறும் என்றார். அமைச்சரின் இந்த பேச்சு அதிமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.