பாடகி சின்மயியின் புகார்கள் கவனிக்கப்பட வேண்டியது: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

0 13

சென்னை: பாடகி சின்மயி வைரமுத்து மீது கூறியுள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தனக்கு 17 வயது இருக்கும் போது வைரமுத்து அலுவலகத்திற்கு சென்று இருந்ததாகவும், அப்போது வைரமுத்து தன்னை கட்டி அணைத்து தவறாக நடக்க முயன்றதாக பாடகி சின்மயி கூறியிருந்தார். வைரமுத்துவிடம் இருந்து தப்பிக்க தனது காலணிகளை கூட எடுக்காமல் வீட்டிற்கு ஓடினேன் என்று புகாரில் தெரிவித்திருந்தார். மேலும் சுவிட்சர்லாந்திற்கு இசை நிகழ்ச்சிக்கு சென்றபோது வைரமுத்து இருந்த ஓட்டல் ரூமுக்கு தனியாக செல்ல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாகவும் சின்மயி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இந்த குற்றசாட்டிற்கு மறுப்பு தெரிவித்த வைரமுத்து தன் மீது அநாகரீகமான அவதூறு பரப்பபடுவதாக விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் பாடகி சின்மயிக்கு ஆதராவாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துகளை பதிவிட்டுள்ளார். பாடகி சின்மயியின் புகார்கள் கவனிக்கப்பட வேண்டியது என்று தெரிவித்துள்ளார். மேலும் சின்மயி கூறும் புகார்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் பாடகி சின்மயி விவகாரத்தில் அமைதியாக இருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.