‘நெருக்கடிகளைச் சேர்ந்து சரிசெய்ய வேண்டும்’ – இந்தியாவுக்கு சீனா அழைப்பு

0 15

அமெரிக்கா சீனா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை இந்தியாவுடன் இணைந்து சரிசெய்ய விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அதிக வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிபரின் இந்தச் செயலுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 28 சதவிகிதம் வரியை நிர்ணயித்தது சீனா இதனால் இந்த இரு நாடுகளுக்கும் இடையே அறிவிக்கப்படாத வர்த்தகப் போர் உருவானது கடந்த சில காலங்களாகவே வர்த்தக அளவில் அமெரிக்காவும் சீனாவும் மறைமுகத் தாக்குதலில் ஈட்டுப்பட்டுவருகின்றன இந்தப் போர் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையைச் சேர்ந்து எதிர்கொள்வோம் என இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது சீனத் தூதரகம் அமெரிக்கா மேற்கொண்டுள்ள சில பொருளாதாரத் தடைகளால் சீனா பாதிக்கப்பட்டுள்ளது சீனாவின் நிலை இந்தியாவையும் பாதிக்கும் எனவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது இதுகுறித்துப் பேசியுள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் சீனா இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்தில் அமெரிக்கா தலையிடுகிறது அமெரிக்கா சீனா மீது விதித்துள்ள சில பொருளாதாரத் தடை நிச்சயம் இந்தியாவையும் பாதிக்கும் இந்த நேரத்தில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமானது தற்போதைய நெருக்கடிகளை இந்தியாவுடன் இணைந்து சரிசெய்யவே சீனா விரும்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்  

Leave A Reply

Your email address will not be published.