‘வேலை தொடங்கிவிட்டது’ – நிர்மலா சீதாராமனின் பிரான்ஸ் பயணம்குறித்து ராகுல் விமர்சனம்

0 14

39ரஃபேல் போர் ஒப்பந்தங்கள் தொடர்பாக நீதிமன்றம் கேட்டுள்ள விளக்கத்துக்காகவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் செல்கிறார்39 என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் மத்திய அரசு பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் இது பல மடங்கு விலையை அதிகமாக பாஜக அரசு வழங்க உள்ளது என்றும் மத்திய அரசின் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்தது என்றும் இதில் ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன ரிலையன்ஸ் நிறுவனம் ரஃபேல் ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும் என இந்திய அரசுதான் வலியுறுத்தியது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் கருத்து தெரிவித்திருந்தார் இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது இந்த ஊழல் தொடர்பாக வழக்கறிஞர் எம்எல்ஷர்மா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ‘ஒப்பந்தத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்ட விதம் ஒப்பந்தம் எதன் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டது உள்ளிட்ட தகவல்களை அளிக்க உத்தரவிட்டது’ ரஃபேல் விமானம் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் விமானம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள்குறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது இது மிகவும் எளிமையானது பிரதமர் முடிவெடுத்துவிட்டார் அவர் முடிவை நியாயப்படுத்தும் காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை ஆனால் வேலை தொடங்கிவிட்டது இதன் தொடர்பாகவே பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரான்ஸ் சென்றுள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார் 

Leave A Reply

Your email address will not be published.