பன்றிக்காய்ச்சலுக்கான சிறப்பு மாத்திரை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது : விஜயபாஸ்கர்

0 4

சென்னை : தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்தார். அப்போது பன்றிக்காய்ச்சலுக்கான சிறப்பு மாத்திரை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அவர், கடுமையான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.