குண்டு எறிதல் போட்டியில் திமுக நிர்வாகி மகள் சாதனை: மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

0 11

சென்னை: குண்டு எறிதல் போட்டியில் சாதனை படைத்த திமுக நிர்வாகியின் மகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். கோவை தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதியாக நிசார் அகமது பதவி வகித்து வருகிறார். இவரது மகள் ரேஷ்மா, குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரேஷ்மா தனது தந்தையுடன் நேற்று சென்னை வந்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரை மு.க.ஸ்டாலின் பாராட்டினார். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன் உடன் இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.