ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்தவர் டிடிவி.தினகரன்: அமைச்சர் ஜெயக்குமார் ஆவேச பேட்டி

0 3

ராயபுரம்: பல சந்தர்ப்பங்களில், ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்தவர் டிடிவி.தினகரன் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை ராயபுரம் ஏஜெ காலனியில் அன்னதான நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜெயலலிதாவின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று. தற்போது ஜெயலலிதாவின் வழியில், அனைத்து திட்டங்களையும் நடத்தி கொண்டிருக்கிறோம். 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தால் அதிமுகதான் மாபெரும் வெற்றி பெறும். டிடிவி.தினகரனின் எண்ணம் பலிக்காது. ஜெயலலிதாவின் ஆன்மா, டிடிவி.தினகரனை மன்னிக்காது. எப்போதுமே அவர், இந்த ஆட்சி நிலைக்காது என கூறுகிறார். அவரது பேச்சை, தொண்டர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.பல சந்தர்ப்பங்களில், ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்தவர் டிடிவி.தினகரன் என்பது, அவர் பேச்சு மூலம் வெளிப்படையாக தெரிந்துள்ளது. அவர் என்ன பேசினாலும், தமிழக மக்கள் ஒருபோதும், அவரை ஏற்று கொள்ள மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.