ராஜஸ்தான் தேர்தல் 2018

0 11

அஜ்மீர் மாவட்டத்தில் அமித்ஷா பரபர…ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அதிலும் அஜ்மீர் மாவட்டத்தில்  பாஜ தலைவர் அமித்ஷா, அரசியல் கட்சிகளின் ஊர்வலத்தால் கடைசி கட்ட பிரசாரம் அதிர வைத்தது. அஜ்மீர் தர்கா, புஷ்கர் ஒட்டகச் சந்தை ஆகியவற்றுக்கு பெயர் பெற்றது, அஜ்மீர் மாவட்டம். வெளிநாட்டினரை அதிகம் ஈர்க்கும் இந்த மாவட்டம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. மாநில சட்டப்பேரவை தேர்தலின் இறுதி நாள் பிரசாரத்தையொட்டி இந்த மாவட்டத்தில் நேற்று நமது குழுவினர் வலம் வந்தனர். பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா பரபரப்பாக நேற்று பிற்பகல்  கேசர் கஞ்ச் பகுதியில் பிரசார ஊர்வலத்தை தொடங்கினார். அவரது தலைமையில் ஏராளமான பாஜ தொண்டர்கள் நடந்தும், வாகனங்களிலும் அணிவகுத்தும் சென்றனர். அவருடன் தெற்கு தொகுதி வேட்பாளரும், மாநில அமைச்சருமான அனிதா பாதெல், வடக்கு தொகுதி வேட்பாளருமான வாசுதேவ் தேவனானி ஆகியோர் வாக்கு சேகரித்தபடியே சென்றனர். இதில், அனிதா தொடர்ந்து 4வது வெற்றிக்காகவும், வாசுதேவ் தொடர்ந்து மூன்றாவது வெற்றிக்காகவும் களம் காண்கின்றனர்.அதேபோல் காங்கிரஸ் கட்சியினர் தெற்கு தொகுதி வேட்பாளர் ஹேமந்த் பாஹ்டி , வடக்கு தொகுதி வேட்பாளர்  மகேந்திரசிங் ரலவாடா ஆகியோரை ஆதரித்து பிரசார ஊர்வலம் சென்றனர். ஹேமந்த் பாஹ்டி பேசுகையில், ‘இவ்வளவு பெரிய மாநகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ பிரிவுக் கூட இல்லை. பாஜ வேட்பாளர் அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. அதனால் இந்த முறை நான் கட்டாயம் வெற்றிப் பெறுவேன்’ என்றார். இப்படி நீண்ட அரசியல் கட்சிகளின் கடைசிக் கட்ட  பிரசார ஊர்வலங்களால் அஜ்மீர் நகரம் நேற்று மாலை வரை ஸ்தம்பித்தது. பல இடங்களில் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  மைக் 1, மைக் 2, மைக்….3தேர்தல் பிரசாரம் செய்ய கடைசி நாளான நேற்று ராஜஸ்தானில் பாஜ.வின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் எல்லோரும் ராஜஸ்தானில்தான் முகாமிட்டிருந்தனர். கடந்த 3 நாட்களாக ராஜஸ்தானில் பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி நேற்று சுமர்பூர் மற்றும் தவுசாவில்  தனது பிரசாரத்தை முடிந்தார். கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அஜ்மீரில் பிரசாரம் செய்தார். அதேபோல் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா, ஜவ்டேஹர்,  ஜெயவர்த்தன ரத்தோர் உட்பட எல்லோ அமைச்சர்களும் நேற்று ராஜஸ்தானில்தான் இருந்தனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் , தலைவர்களும் ராஜஸ்தானில்தான் இருக்கின்றனர். அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானாவில் பிரசாரத்தை முடித்தார்.கொடி ‘ஹேடோ’அஜ்மீரில் நேற்று மாலை பிரசாரம் முடிவடைந்த நிலையில், அனுமதிக்கப்படாத இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிகள், தட்டிகள் உள்ளிட்டவற்றை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட இடங்களில் அதிகாரிகள் வலியுறுத்தியபடி சென்றனர்.காவி மயமான கேசர் கஞ்ச்* பாஜ தலைவர் அமித்ஷா நேற்று அஜ்மீரின் கேசர் கஞ்ச் பகுதியில் பிரசாரம் செய்ததை முன்னிட்டு, அப்பகுதி முழுவதும் பாஜ கொடிகள். அதன் நிறத்தில் அமைந்த பலூன்கள், அமித்ஷாவின் ஆளுயர அட்டைகள் பார்க்கும் இடமெல்லாம் அமைக்கப்பட்டிருந்தது.*  ஊர்வலத்துக்கு வந்த தொண்டர்களுக்கு தலைப்பாகை கட்டிவிடுவதற்காக ஒரு வர்த்தகர் 2 ஆட்களை அதற்கென்றே நியமனம் செய்திருந்தார். அவரிடம் தலைப்பாகைக்கான நீண்ட துணியை கொண்டு வந்து கொடுத்தால், அதை அழகாக ராஜஸ்தான் தலைப்பாகையை கட்டிவிட்டனர்.* அமித்ஷா வாகனத்துக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு, காவி நிற டீசர்ட் வழங்கப்பட்டு இருந்தது. எல்லை மீறிய தொண்டர்கள்ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பொதுவாக அதிக வாகனங்கள் காணப்படாத நிலையே இருந்தது. ஒற்றை காரில் வேட்பாளர் குறிப்பிட்ட பகுதிக்கு வந்து வாக்கு சேகரிப்பதும், பின்னர் மீண்டும் தன்னுடைய காரிலேயே கிளம்பிச் செல்வதும் ஆகத்தான் இருந்தது. ஆனால், பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று, ஒவ்வொரு வேட்பாளரின் வாகனத்தின் பின்னாலும் குறைந்தபட்சம் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்தன. இதுதவிர பல்வேறு தொண்டர்கள் பைக்குகளில் காதை கிழிக்கும் சத்தத்துடன் வேட்பாளரின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர். ஆனால், தேர்தல் அதிகாரிகள் இதை கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.கோபப்பட்ட அமித்ஷாஅஜ்மீரின் கேசர் கஞ்சில் ஊர்வலம் தொடங்கும் முன்பு, மூன்று முனை சாலையில், தொண்டர்களின் நடுவில் பிரசார வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. காரில் வந்த அமித்ஷா அதில் ஏறிய உடன், முன்புறம் பார்க்க தொண்டர்களே இல்லை. அதேபோல் வலது புறமும் தொண்டர்கள் குறைவாக இருந்தனர். ஆனால், வலது புறம் ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்களை முன்புறம் அனுப்பி தயாராக இருக்காததால், பிரசார வாகனத்தில் இருந்த பாஜ தலைவர்களை அமித்ஷா கடிந்து கொண்டார். ஒரு கட்டத்தில் வாகனத்தை விட்டு கீழே இறங்கி தொண்டர்களை முறைப்படுத்தவும் அவர் முயன்றார். ஆனால், தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தி தடுத்துவிட்டனர்.      டாக்டரின் ஊசி சின்னம்அஜ்மீர் தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் ஒரு டாக்டர் ராகேஷ் சிவாசியா. இவர் சிம்பாலிக்காக ஊசி சின்னத்தில் போட்டியிடுகிறார். அதனால் ஊசி போன்ற உருவம் பொருத்தப்பட்ட வாகனத்தில் பிரசாரம் செய்தார். இவர் தன்னுடைய தொகுதியில் தான் நிறைவேற்றப் போவதை உறுதிமொழிப் பத்திரமாக சமூக இணையதளங்களில் வெளியிட்டுள்ளார்..

Leave A Reply

Your email address will not be published.