இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

0 7

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தி: இந்தியாவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளான ஜிசாட் 11 இஸ்ரோ விஞ்ஞானிகளால் பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டு, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கும், தொடர் ஆராய்ச்சிக்கும், திறமையாக மேற்கொண்ட பணிகளுக்கும் கிடைத்திருக்கின்ற தொடர் வெற்றியாக இது அமைந்திருக்கிறது. இது இந்திய விஞ்ஞானிகளுக்கு மேலும் ஒரு மைல் கல்லாகும். இதன் மூலம் இந்திய விஞ்ஞானிகளின் பெருமையும், புகழும் உலக அளவில் நிலைநாட்டப்படுகிறது. இது இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறது. இந்திய விஞ்ஞானிகளின் இந்த வெற்றிப் பயணம் மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

Leave A Reply

Your email address will not be published.