`ராமர் கோயிலா… பாபர் மசூதியா?’ – ஒரு புத்தகம் சொல்லும் சாட்சியம்!

0 6

`அயோத்தியா – ஓர் இருண்ட இரவு – பாபர் மசூதியில் ராமர் ஜனித்த ரகசிய வரலாறு’ – ஐந்து வருடங்களுக்கு முன்பு கிருஷ்ண ஜா மற்றும் தீரேந்திரநாத் ஜா இருவரும் இணைந்து எழுதி வெளியிட்ட புத்தகம் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரலாற்று ஆவணங்கள் அத்தனையும் இன்றைய பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அனைத்து இந்துத்துவ அமைப்புகளும் குறிப்பிடும் ராமர் கோயில் இருந்ததற்கான ஆவணங்கள் அனைத்தையும் பொய்யென்று எதிர்ப்பவை ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அயோத்தியில் அவருக்கு மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன பதினைந்து கோயில்களும் அந்தந்த கோயில்கள் கட்டப்பட்டிருக்கும் இடத்தில்தான் ராமர் பிறந்ததாகக் கூறுகின்றன இது தவிர தசரதன் கோசலை பரதன் என அனைவருக்கும் தனித்தனியே கோயில்கள் இருக்கின்றன இந்த நிலையில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடத்தில் எப்படி ராமர் பிறந்ததாக வரலாறு உருவானது`அயோத்தியா’ புத்தகத்தின்படி ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் இடம் என்பதால் அருகிலேயே இருக்கும் அனுமன்கரில் இந்துமதச் சாதுக்கள் வசிப்பதற்கான கூடாரங்கள் இருந்தன அதில் 500-க்கும் மேற்பட்ட சாதுக்கள் இருந்தார்கள் அதில் அபிராம்தாஸ் என்பவர் சுமார் 30 வருடங்களுக்கு முன்பே பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்கிற போராட்டத்தைத் தொடங்கியிருந்தார் அதாவது 1949 ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று பாபர் மசூதிக்குள் ரகசியமாகச் சென்று ராமர் சிலையை வைத்ததாக அந்தப் பகுதி காவல்நிலையத்தில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது ஆனால் காலப்போக்கில் அந்த வழக்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்கிற கண்ணோட்டத்தில் மௌனமாகவே கடந்திருக்கி்றது காவல்துறைஆனால் அபிராம்தாஸ் மட்டும் மதப்பற்றாளர்கள் வட்டத்தில் `ராமஜென்ம பூமியைக் காக்கப் பிறந்தவர்’ என்று பேசப்பட்டிருக்கிறார் `ராமஜென்ம பூமி’ என்கிற சொல்லாக்கமும் அப்படித்தான் உருவாகியிருக்கிறது முப்பது வருடங்கள் கழித்து 1981ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி சாது அபிராம்தாஸ் மரணித்தார் அப்போது அவரைப் புதைப்பதற்காக எடுத்துச் செல்லப்படும் வழியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் மக்களின் பார்வைக்காக அவரது பூதவுடல் வைக்கப்பட்டது பிறகு சரயு நதி நீருக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜலசமாதி செய்யப்பட்டார் அதுவரை அமைதியாக இருந்த இந்துத்துவ அமைப்புகளும் கட்சிகளும் அவரது இறப்பை அடுத்து தங்களது ஆதாயத்துக்காக அந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துக்கொண்டன இந்த அமைப்புகள் யாரென்றால் 1948ல் காந்தி கொல்லப்படக் காரணமாக இருந்த அதே அமைப்பினைச் சார்ந்தவர்கள் அவர்கள்தான் 1949ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி பாபர் மசூதியில் ராமர் சிலை வைப்பதற்குத் திட்டமிட்டவர்களும் 1992ல் அது சார்ந்த வன்முறை வெடித்தபோது அயோத்தியில் அப்போதிருந்த விரக்தா என்னும் இந்தி வார இதழ் `ராம ஜென்ம பூமியின் ரத்தம் சொரிந்த வரலாறு’ என்று பதிவு செய்தது” எனப்  பதிவு செய்துள்ளனர் இவர்களின் புத்தகத்துக்கு வலுசேர்க்கும் விதமாக அண்மையில் சென்னைக்கு வந்திருந்த ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்த ஸ்வாமி அக்னிவேஷ் “ராமரைக் கடவுளாக வணங்கினால் கடவுளுக்கு இறப்பும் பிறப்பும் இல்லை என்பதை உணரவேண்டும் அப்படியே ராமர் மனித அவதாரம் என்றாலும் அவர் அங்கே 1528ல் கட்டப்பட்ட பாபர் மசூதி இருக்கும் இடத்தில்தான் பிறந்தார் என்பதை 1927ல் பிறந்த அத்வானியும் 1959ல் பிறந்த உமாபாரதியும் எந்த வரலாற்று ஆதாயத்தை வைத்துச் சொல்லமுடியும்” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்

Leave A Reply

Your email address will not be published.