எங்கள் மீது விழும் சேற்றை வாரி இறைத்தாவது தாமரையை மலர வைப்போம்: தமிழிசை சௌந்தரராஜன்

0 5

சென்னை: எங்கள் மீது விழும் சேற்றை வாரி இறைத்தாவது தாமரையை மலர வைப்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழிசை செந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம், காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் என பதிவிட்டிருந்தார். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!, என கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மேகதாது விவகாரத்தில் முதல் எதிர்ப்பை பதிவு செய்தது பாஜகதான். அணை சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதற்கு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளதே தவிர, காவிரியில் அணையை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், தமிழகத்தில் தாமரை மலரும். குளத்திலும் தாமரை மலரும், களத்திலும் தாமரை மலரும். எங்கள் மீது விழும் சேற்றை வாரி இறைத்தாவது தாமரையை மலர வைப்போம் என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.