ஒப்பந்ததாரர்களிடம் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்களா அதிகாரிகள்…?

0 5

பெருநகர சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்புப் பணிகளுக்காக தமிழக அரசு 744 கோடி நிதி ஒதுக்கி திட்டங்களை அறிவித்தது டெண்டரைப் பெற பெரிய நிறுவனங்கள் 130 கோடி ரூபாய் அளவுக்கு அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் கமிஷனாக வழங்கியதால் பேக்கேஜ் டெண்டர் என்று சொல்லி அதிகாரிகள் ஊழல் செய்திருப்பதாக பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் இந்த டெண்டர் முறைகேடு குறித்து சென்னையைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து `இதுவரை வழங்கப்பட்ட 744 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு புதிதாக ஒப்பந்தம் கோரவேண்டும்39 எனக் கோரிக்கை வைத்துள்ளனர்பேக்கேஜ் டெண்டர்முறை என்பது முதல் முறையாக 2012-ம் ஆண்டு தமிழக நெடுஞ்சாலைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டது ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தயாரிக்கும்போது மிக அதிகளவிலான தொகை தமிழகத்தில் உள்கட்டமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு வருகிறது பேக்கேஜ் டெண்டர் முறைக்கு முன்னர் அனைத்துச் சிறிய பணிகளுக்கும் தனியாக ஒப்பந்தம் கோரும் முறை இருந்தது  இதனால் குறைந்த முதலீட்டில் டெண்டர் தொழிலில் ஈடுபட்டவர்களும் அதிகமான டெண்டர்களில் பங்கெடுத்தனர் இவை ஆரோக்கியமான போட்டியை ஒப்பந்ததாரர்களிடையே உருவாக்கியதால் பணிகளும் சிறப்பாக நடைபெற்றன இப்போது உள்ள பேக்கேஜ் முறையில் பல சிறிய பணிகளை ஒருங்கிணைத்துக் கொடுப்பதால் குறைந்த முதலீட்டில் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பங்கேற்க முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்அதிமுக-வுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டியின் வீட்டில் 130 கிலோ தங்கம் 134 கோடி ரொக்கப் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன அதேபோல் அவர்களுக்கு நெருக்கமான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீட்டிலிருந்து 180 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர் இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பணிக்கான ஒப்பந்தத்திலும் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் நெருங்கிய நண்பருக்குச் சொந்தமான கேசிபி இஞ்சினீயரிங் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது இந்தச் செயல்தான் ஒப்பந்ததாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஊழல் நடந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை அதிகரித்துள்ளதுஇது குறித்து மாநகராட்சி டெண்டர் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம் “ஒப்பந்ததாரர்களிடம் சாதிச் சான்றிதழ் கேட்பது நடைமுறையில் இல்லாத ஒன்று ஆனால் இப்போது புதிதாக சாதிச் சான்றிதழையும் அதிகாரிகள் கேட்க ஆரம்பித்துள்ளனர் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட டெண்டர் பணிகளுக்குக் கோரப்படும் ஒப்பந்தங்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பணிகள் சேலம் கோயம்புத்தூரைச் சேர்ந்த நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றன அதுவும் கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதிக்குத்தான் அதிக முன்னுரிமையாம் 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வுக்கு அதிகளவு ஓட்டுகளை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வாக்காளர்கள்தான் அளித்தனர் எனவே அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக-வுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கொங்கு பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது மேலும் சென்னை மாநகராட்சி பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் பெருவாரியான நிறுவனங்கள் ஒரே கணிப்பொறியிலிருந்து பதிவு செய்யப்பட்டிருக்கின்றன நிறுவனம் தொடங்கப்பட்டு குறுகிய காலமே ஆன நிறுவனங்கள் வருமான வரி செலுத்தியது போன்ற போலி ரசீதுகளை சமர்ப்பித்து மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுள்ளனர் என்று குற்றம்சாட்டுகின்றனர் அவர்கள்இதுகுறித்துப் பேசிய ஒப்பந்ததாரர்களின் ஒருங்கிணைப்பாளர் சந்திர போஸ் “744 கோடி ரூபாய் மட்டுமல்லாது இதுபோன்று பெரிய அளவிலான தொகை நிறைய நபர்களைச் சென்றடையாமல் குறிப்பிட்ட சிலரிடமே மாட்டிக்கொண்டுள்ளது ஒப்பந்தங்களைப் பகிர்ந்து கொடுக்கும் போதுதான் அவை அனைவரையும் சென்றடையும் அதிகமானவர்களுக்கு வேலை கிடைக்கும் பணிகளும் தரமானதாக நடைபெறும் எங்களில் பலருக்கும் பல கோடி ரூபாய் அரசிடமிருந்து இன்னும் வர வேண்டியுள்ளது அந்தத் தொகை நிலுவையில் உள்ளது இப்படியிருக்கும்போது ஒரு நிறுவனத்திற்கே பல பணிகளை கொடுப்பதால் அந்த நிறுவனங்கள் ஒப்பந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியாது டெண்டர் பற்றிய அறிவிப்புகளை முறையாக வெளியிட வேண்டும் இந்த ஒப்பந்தங்கள் குறித்த செய்தி 09082018-ம் ஆண்டு முதலில் வெளியானது அதிலும்  எந்தத் தகவலும் சரிவர இல்லை பல நேரங்களில் டெண்டர் குறித்தான செய்திகளே எங்களை ஒழுங்காக வந்து சேருவதில்லை” என்றார்மக்களின் தேவைகளுக்குத் திட்டங்களை வகுக்காமல் சில நேரங்களில் நிறுவனங்களின் தேவைகளுக்காக அரசு திட்டங்களை வகுக்கின்றது வீணாவது என்னவோ மக்களின் வரிப்பணம்தான்

Leave A Reply

Your email address will not be published.