வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு 10,000 கொடுத்தாலும் அதிமுக டெபாசிட் வாங்காது: டிடிவி தினகரன் பேச்சு

0 11

தர்மபுரி: .தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில், அ.ம.மு.க. சார்பில், தமிழக அரசை கண்டித்து நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இந்த ஆட்சி நீடிக்காது. திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்தனர். ஆனால் கடந்த டிசம்பர் மாதமே, தலைமை செயலாளர் தேர்தல் வேண்டாம் என்று தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால், தேர்தலை சந்திக்க தயார் என்று, அதிமுக அமைச்சர்கள் வாய் ஜாலம் காட்டினர். ஒருபக்கம் தேர்தலை நிறுத்த கூறிவிட்டு, மறுபக்கம் தேர்தலை சந்திக்க தயார் என்று மக்களிடம் நடித்தனர். 20 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷன் மட்டுமல்ல, அதிமுகவும் பயப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறாது. ஓட்டுக்கு 10 ஆயிரம் கொடுத்தால் கூட அதிமுக டெபாசிட் வாங்க முடியாது. 20 தொகுதிக்கும் தேர்தல் நடந்தால், அமமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.