அயோத்தி வழக்கு தொடர்பான அமர்விலிருந்து நீதிபதி விலகல்!

0 4

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010 ஆண்டு தீர்ப்பு வழங்கியது அந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம்  தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றப்பட வேண்டும் எனப் பலரும் நீண்ட காலமாக கோரி வந்த நிலையில்தற்போது அயோத்தி  வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ரமணா லலித் பாப்தே சந்திரசூட் யூயூலலித் ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய புதிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது அயோத்தி தொடர்பான வழக்குகள் ஜனவரி 10 தேதி முதல் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் ஐந்து பேர் கொண்ட அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி யூயூலலித் இந்த அமர்விலிருந்து விலகியுள்ளார்நேற்று அயோத்தி  வழக்கின் விசாரணை தொடங்கிய நிலையில் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் ராஜீவ் தாவான் இந்த அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவரான  யூயூலலித் 1994-ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரானவர்” எனத் தெரிவித்தார் இதைத் தொடர்ந்து  நீதிபதி யூயூலலித் இந்த அமர்விலிருந்து தான் விலகிக் கொள்வதாக உடனடியாக அறிவித்து அமர்விலிருந்து விலகினார்இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில் ஏற்கெனவே மத்தியில் ஆட்சியில் உள்ள பிஜேபியோடு கூட்டணி வைத்த சிவசேனா கட்சியைச் சார்ந்தவர்களும் பிஜேபிக்கு ஆதரவாக இயங்கிவரும்  இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் சேர்ந்தவர்களும் பிஜேபியின் இந்த ஆட்சிக் காலம் முடிவதற்குள் ராமர் கோயிலை கட்ட வேண்டும் எனத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.