பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை; ஆனால் ஆட்சியில் தொடர்பு இருக்கிறது – தம்பிதுரை

0 7

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா  பிறந்தநாள் வருவதை முன்னிட்டு அவர்கள் செய்த சாதனைகளை விளக்கும் வகையில் எல்சிடி  திரை கொண்ட வாகனம் மூலம்  ஒவ்வொரு ஊராக சென்று விளம்பரம் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது அதன் தொடக்கமாக நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் விளம்பர வாகனத்தை தொடங்கி வைத்தார்  கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும்  துணை சபாநாயகருமான தம்பிதுரை அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை “மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தொடர்பு இருக்கிறது ஆனால்  கூட்டணி என்பது வேறு ஜெயலலிதா இருந்த காலங்களில் மோடி அரசின் திட்டங்களை எதிர்த்தும் இருக்கிறோம் ஆதரித்தும் இருக்கிறோம் குறிப்பாக ஜிஎஸ்டியை முழுமையாக அதிமுக அரசு எதிர்த்தது அதேபோல் மோடி ஆட்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு காலம் தாழ்த்தியதைக் கண்டித்தோம் அதேபோல் பாராளுமன்றத்தில் 23 நாள்கள் தொடர்ந்து விவாதித்தோம் தமிழகத்துக்குப் பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் நாங்கள் தொடர்ந்து மோடி அரசை எதிர்த்து இருக்கிறோம்மத்திய அரசும் மாநில அரசும் நல்ல நட்பு முறையில்தான் இருக்கிறது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் இத்தாலிய கம்பெனியில் 2003-ல் வாஜ்பாய் அரசு இருக்கும்பொழுது ஹெலிகாப்டர் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள் ஆனால் நிர்மலா சீதாராமன்  காங்கிரஸ் ஆட்சியில் தான் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது என அவையில் தவறான செய்தியைச் சொன்னபொழுது  அது தவறான பதிவு என்று அவையில்  சொன்னேன்காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களிலும் ஒப்புதல் பெற வேண்டும் பின்பே அணை கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் தீர்ப்புக்கு மாறாக மத்திய அரசு கர்நாடக அரசுக்கு அணை கட்டுவதற்கு உதவி செய்யும் வகையில் நடந்துகொண்டதைக் கண்டித்தோம்அதேபோல் பொன் ராதாகிருஷ்ணன் நிர்மலா சீதாராமன் இருவரும் அதிமுக அரசை செயல்படாத அரசு என்று கூறுகிறார்கள் அப்படி அவர்கள் கூறுவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படாத முதல்வர் என்றும் திராவிட கட்சிகள் ஊழல் கட்சிகள் என்றும் கூறுகிறார்கள் அவர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் எனது கருத்தைப் பதிவு செய்கிறேன் ஏனென்றால் அதிமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளராக நான் இருக்கிறேன் என்றார்வேடசந்தூர் பேருந்து நிலையம் முன்பு பொங்கல் பரிசுத் திட்டத்தைத் துவக்கி வைத்து பேசிய தம்பிதுரை “தமிழகத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசாக ரூ 1000 ரூபாய் ஏழை எளிய மக்களின் நலனுக்காக கொடுக்கப்பட்டது ஆனால் திமுக தலைவர் முகஸ்டாலின் வரைமுறை இல்லாமல் உச்சநீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்குகிறார் ஏழை எளிய மக்கள் வயிற்றில் அடிக்கலாமா  திமுக ஆட்சியில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தார்கள் அதனால் யாருக்கு என்ன பலன்  இனிமேல் தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்தாலும் கட்டப்பஞ்சாயத்து பாடினாலும் யார் மீது வழக்கு தொடர்ந்தாலும் முதலமைச்சராக முடியாது என்றார்

Leave A Reply

Your email address will not be published.