வாஜ்பாயுடன் மோடி ஒப்பிட்டுக் கொள்வது பிரச்சார யுக்தி; பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என மு.க.ஸ்டாலின் உறுதி

0 14

சென்னை: பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி ஆட்சியில் தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் பன்முக தன்மையை பிரதமர் மோடி பாதுகாப்பவர் அல்ல என்றும், வாஜ்பாயுடன் மோடி ஒப்பிட்டுக் கொள்வது அவரது பிரச்சார யுக்தி என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி வாஜ்பாயும் அல்ல; அவர் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல என்று ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் நாட்டை பிளவிபடுத்தும் எந்த திட்டத்தையும் முன் வைக்காததாலேயே வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவளித்தது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட கூட்டணி தர்மத்தை பின்பற்றுவோம் என்று மோடி தெரிவித்தார். பழைய நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நமது கதவுகள் திறந்து இருக்கும்’ என்று தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பாஜ நிர்வாகிகள் மத்தியில் பிரதமர் மோடி நேற்று பேசினார். இந்நிலையில் இன்று இதற்கு பதிலளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.