`ஸ்டாலின் நடத்தும் கிராமசபைக் கூட்டம் ஒரு நாடகம்!’ – வைத்திலிங்கம் எம்.பி விமர்சனம்

0 18

மூன்று மாதத்தில் தேர்தல் வர இருப்பதனாலேயே திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு நாடகம்போல் கிராம சபைக் கூட்டத்தை நடத்தி வருகிறார் எனத் தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் 6 புதிய பேருந்துகளை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அதிமுக துணை ஒருங்கணைப்பாளரும் எம்பி-யுமான வைத்திலிங்கம் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர் இதில் எம்பி-க்கள் கலெக்டர் அண்ணாதுரை மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்புதிய பேருந்தை கொடியசைத்து தொடக்கி வைத்த பிறகு வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார் அவர் கூறுகையில் “தமிழகத்தில் உள்ள அனைத்து தர மக்களும் பொங்கல் பரிசு பெற்று பயன் அடைய வேண்டும் என்பதுதான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசின் நோக்கம் அதைத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் இப்போது நீதிமன்றம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது இதற்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்து வழக்கு நிலுவையில் இருக்கிறது இந்த நிலையில் மக்கள் எல்லோரும் பயன்பெற வேண்டிய திட்டத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தீர்ப்புக்குப் பிறகு இது குறித்து முடிவு செய்யப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு கிராமத்துக்குச் சென்று அடிப்படைத் தேவைகளைக் கேட்டு அவற்றைப் பூர்த்தி செய்தார்கள் இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வர உள்ளது அதற்காகவே திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு நாடகம்போல் கிராம சபைக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 14 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன ஒவ்வொருவரும் பயன்பெற எந்தெந்த வகையில் உதவி செய்ய முடியுமோ அந்தந்த வகையில் ஆய்வு செய்து தமிழக அரசு இந்த மக்களுக்கு சிறிதளவும் துன்பம் வராமல் செய்ய வேண்டிய பணிகளைச் செய்துகொண்டிருக்கிறது சில நேரங்களில் நிதி நிலைக்கு ஏற்ப மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இந்த அரசு செய்யும்’’ என்றார் 

Leave A Reply

Your email address will not be published.