“செவுரு கட்டணும்… காசு கொடுங்க..!’’ – அமெரிக்காவை அலறவிடும் ட்ரம்ப்

0 8

ஆளானப்பட்ட அமெரிக்கா அமைதியிழந்து கிடக்கிறது “அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டியே தீருவேன்” என்று அதிபர் ட்ரம்ப் அடம்பிடித்து வருவதே அத்தனைக்கும் காரணம் மூன்றுவாரங்களாக அரசாங்கத்துக்குப் பூட்டுப்போட்டு அட்டூழியம் செய்துவருகிறார் அரசாங்க ஊழியர்களும் ஒப்பந்ததாரர்களும் ஊதியம் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள் அரசு சேவைகளைப் பெற முடியாமல் குடிமக்கள் அல்லல்படுகிறார்கள் ஆனால் `எது நடந்தால் எனக்கென்ன எனக்குச் சுவர்தான் முக்கியம்” என்று மல்லுக்கட்டி வருகிறார் ட்ரம்ப்“அமெரிக்காவின் எல்லைப் பகுதிகளில் போதைப்பொருள் புழக்கமும் கொலை கொள்ளைக் குற்றங்களும் அதிகரித்துவருகின்றன அதற்கெல்லாம் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களே முழுக்காரணம்’ என்று குற்றம்சாட்டுகிறார் ட்ரம்ப் எனவே “எல்லைப் பகுதியில் சுவரை எழுப்பி அமெரிக்க மக்களைப் பாதுகாக்கப் போகிறேன்” என்று அறிவித்தார் அவர் ஆரம்பத்தில் சிரிப்புக்காகச் சொல்கிறார் என்றே பலரும் நினைத்தார்கள் ஆனால் அவர் சீரியஸாகவே அதைச் சொல்லியிருக்கிறார்அமெரிக்கா – மெக்சிகோ எல்லைப் பகுதி கிட்டத்தட்ட 1900 மைல் தொலைவுகொண்டது கலிபோர்னியா அரிசோனா நியூ மெக்சிகோ டெக்சாஸ் என நான்கு மாநிலங்களை உள்ளடக்கியது அங்கே `கிட்டத்தட்ட 1000 மைல் அளவுக்குச் சுவரோ அல்லது இரும்புத்தடுப்போ அமைக்கப்படும்’ என்பதே ட்ரம்பின் அறிவிப்பு அதைச் சாத்தியப்படுத்த வேண்டுமென்றால் 35000 கோடி ரூபாயிலிருந்து 40000 கோடி ரூபாய் வரை பணம் தேவை அதை வாங்குவதற்குத்தான் `அமெரிக்காவைக் காப்பாத்தணும் காசு கொடு’ என்று காங்கிரஸ் சபையிடம் அடம்பிடித்து வருகிறார் ட்ரம்ப் “இது உயரமான சுவர் உத்தரவாதமான சுவர்” என்று `சுவர்39 ஞாபகத்திலேயே சுற்றுகிறார் மனிதர்ஆனால் அமெரிக்க மக்களில் பலருக்கு அந்தச் சுவர் கட்டப்படுவதில் விருப்பமில்லை `சுவர் வேண்டுமா வேண்டாமா’ என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் `வேண்டாம்’ என்றே பலரும் சொல்லி இருக்கிறார்கள் `பன்மைத்துவமே பலம்’ என்ற முழக்கத்தையே அமெரிக்காவின் பல பகுதிகளில் கேட்க முடிகிறது சில மாதங்களுக்கு முன்னால் மெக்சிகோ அகதிகளை ட்ரம்ப் அரசாங்கம் அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்பியபோது அமெரிக்க மக்கள் கொதித்து எழுந்தார்கள் “ஆதரவற்ற நிலையில் அடைக்கலமாகும் அகதிகளைத் தடுப்பதும் திருப்பி அனுப்புவதும் அறமல்ல” என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள் இப்போதும் அதையே சொல்கிறார்கள் “அமெரிக்காவின் அடையாளமாக அன்பைப்பேசும் சுதந்திரதேவி சிலைதான் இருக்க வேண்டும் வெறுப்பைக் காட்டும் சுவரல்ல அந்தச் சுவர் அமெரிக்க வரலாற்றில் கரும்புள்ளியாக நீடிக்கும்” என்று எச்சரிக்கிறார்கள் ஆனால் கண்ணையும் காதையும் மூடி அமர்ந்திருக்கிறார் ட்ரம்ப் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் சுவர் கட்டுவதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை “குற்றங்கள் நடக்கின்றனதான் ஆனால் அது எல்லாமே சட்டவிரோதக் குடியேறிகளால்தான் நடக்கின்றன என்பதை ஏற்க முடியாது பத்தில் ஒருவரே அதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் சட்டவிரோதக் குடியேறிகள் செய்த குற்றங்களின் பட்டியலை வெளியிட்டால் உண்மைநிலை தெரியும் என்று சொல்கிறார்கள் ஆனால் அப்படியொரு பட்டியலை வெளியிட ட்ரம்ப் விரும்பவில்லை ஏனென்றால் அப்படியொரு பட்டியலே அவரிடம் இல்லைபோதைப்பொருள் பிரச்னைக்கு வருவோம் “போதைப்பொருள் கடத்தல் துறைமுகங்கள் வழியாகவே அதிகம் நடக்கிறது அதைத் தடுத்தாலே போதைப்பொருள் புழக்கத்தைக் குறைத்துவிட முடியும் அதை முதலில் சரிசெய்ய வேண்டியதுதானே என்று கேட்கிறார்கள் மக்கள் காங்கிரஸ் சபையும் “துறைமுகக் கண்காணிப்புக்கு நிதி ஒதுக்கத் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்துவிட்டது ஆனால் “அதை வேண்டாம்3939 என்கிறார் ட்ரம்ப்சட்டவிரோதக் குடியேறிகள் செய்த குற்றங்களுக்கான ஆதாரங்களையும் வெளியிட மறுக்கிறார் துறைமுகக் கண்காணிப்புக்கான நிதியையும் வேண்டாம் என்கிறார் என்றால் ஒரே அர்த்தம்தான் சட்டவிரோத அகதிகள் வருவதை அல்ல அகதிகள் வருவதையே தடுக்க நினைக்கிறார் ட்ரம்ப் இஸ்லாமியருக்கு அனுமதி மறுத்தது எச்1பி விசாவுக்குக் கட்டுப்பாடுகள் விதித்தது போன்ற நடவடிக்கைகளின் வரிசையில் சுவர் கட்டுதலையும் கொண்டுவந்து நிறுத்துகிறார் அவர் அகதிகளை வெறுக்கிறார் அதற்காக `சட்டவிரோதம்39 என்ற சாக்கைச் சொல்கிறார் உண்மையில் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் குடியேறும் மக்களில் பலர் அங்கே அடிமை ஊழியம்தான் செய்கிறார்கள் அதற்கும் வேட்டுவைக்கிறார் ட்ரம்ப்அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே வலதுசாரி ஆட்சியாளர்கள் அதிகரித்து வருகிறார்கள் “அனைத்துப் பிரச்னைகளுக்கும் அந்நியன்தான் காரணம்” என்ற பிரசாரம்தான் அவர்களின் அசுரபலமாக இருக்கிறது இந்தப் பாதையை இவர்களுக்குப் போட்டுக்கொடுத்தவர் அடால்ஃப் ஹிட்லர் அவர் சொல்கிறார் “உன்னால் உன் மக்களின் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லையா கவலைப்படாதே அனைத்துப் பிரச்னைகளுக்கும் அந்நியன்தான் காரணம் என்று சொல் அப்போதுதான் வெறி கிளம்பும் வெற்றி கிடைக்கும்” இதே பாதையைப் பின்பற்றித்தான் `பிரெக்ஸிட்’டை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார்கள் ஜெரார்ட் பேட்டன் போன்ற வலதுசாரிகள் “நமக்கான வாய்ப்புகளை அந்நியன் பறித்துக்கொள்கிறான்” என்று வெறுப்பை விதைத்தார்கள் வெற்றியும் கண்டார்கள் ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகுவதாக அறிவித்து ஆண்டு இரண்டாகிவிட்டது ஆனால் அங்கே எதுவும் மாறவில்லை இருக்கும் வேலைவாய்ப்புகளையும் இழக்கப்போகிறார்கள் என்பதே இப்போதைய நிலை அதனால்தான் “மீண்டும் வாக்கெடுப்பு நடத்துங்கள் என்ற குரல் அங்கே அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது அப்போதே அலர்ட் செய்தார் கேமரூன் கேட்டால்தானேஇப்போது ட்ரம்பின் டர்ன் `அனைத்துக்கும் அந்நியன்தான் காரணம்’ என்ற அரசியலைத்தான் அவரும் கையில் எடுக்கிறார் “அமெரிக்க ரத்தத்தைக் காக்கவேண்டும்” என்று அவர் சொல்வதைக் கவனித்தால் அதைப் புரிந்துகொள்ள முடியும்`அமெரிக்கா- மெக்சிகோ’ எல்லைச் சுவருக்கு முன்மாதிரியாக அவர் காட்டுவது பெர்லின் சுவர் அந்தச் சுவர் கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் முப்பது ஆண்டுகள்வரை பிரித்து வைத்திருந்தது அந்தச் சுவருக்கு `பாசிச தடுப்புச்சுவர்’ என்று அடைமொழியிட்டது கிழக்கு ஜெர்மனி அரசு அப்புறம் அந்தச் சுவரை மக்களே இடித்துத் தள்ளினார்கள் கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைந்தன இது வரலாறு அதற்குப் பிறகு அப்படியொரு சுவர் வேறெந்த நாட்டின் எல்லையிலும் எழுப்பப்படவில்லை ஏறக்குறைய எல்லா நாடுகளுமே அகதிகளை அரவணைக்கத் தயாராகவே இருக்கின்றன அதற்குரிய திட்டங்களையும் அறிவித்திருக்கின்றன ஐக்கிய நாடுகள் மன்றத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று அகதிகள் பாதுகாப்பு ஆனால் அதிலிருந்து அமெரிக்காவை அறுத்துக்கொண்டுபோக நினைக்கிறார் ட்ரம்ப் ஆப்கனிலும் சிரியாவிலும் அகதிகளை உருவாக்கி உலகெங்கும் அலையவிட்ட அமெரிக்காவின் அதிபராக இருந்துகொண்டு `அகதிகளை ஏற்க மாட்டேன்39 என்று சொல்ல தனித் துணிச்சல் வேண்டும் சுவர் கட்டும் ஆட்டத்தில் `மெக்சிகோ39தான் ட்ரம்பின் ட்ரம்ப் கார்டு “சுவரை அமெரிக்கா மட்டும் விரும்பவில்லை மெக்சிகோவும் விரும்புகிறது என்று செக் வைக்கிறார் `சுவர் கட்டுவதற்கு மெக்சிகோ மறைமுகமாக நிதி வழங்க வேண்டும்’ என்றும் அறிவித்திருக்கிறார் `அறிவித்திருக்கிறார்39 என்பதைவிட `ஆணையிட்டிருக்கிறார்39 என்றே சொல்ல முடியும் ஏனென்றால் மெக்சிகோவிலும் மற்ற மத்திய அமெரிக்க நாடுகளிலும் அண்ணன் அமெரிக்காவின் அதிகாரம் அப்படிப்பட்டது இப்போது “நீ பாதி காசு போடு என்று மெக்சிகோவை மிரட்டி வருகிறார் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறது மெக்சிகோ அரசாங்கம் ஏனென்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் கிடக்கிறது அதனால்தான் குழந்தை குட்டிகளுடன் மெக்சிகோ மக்கள் அமெரிக்கா வருகிறார்கள் இந்தச் சூழலில் அவ்வளவு பணத்துக்கு அந்த நாடு எங்கே போகும்” இது அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்னை’ என்று அறிவித்துவிட்டார் அதிபர் ஆன்ட்ரஸ் மேனுவல்இதுவரை பலகட்ட பேச்சுவார்த்தைகளை ட்ரம்புடன் நடத்திவிட்டார்கள் காங்கிரஸ் மற்றும் செனட் சபை தலைவர்கள் ஆனால் ட்ரம்ப் இறங்கிவர மறுக்கிறார் “எல்லைப் பாதுகாப்புதானே பிரச்னை ராணுவத்தைப் பலப்படுத்துங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துங்கள் அதற்காக 15000 கோடி ரூபாய் அளவுக்குத் தருகிறோம்” என்றும் சொல்லிப் பார்த்தார்கள் ஆனால் “சுவர்தான் கட்டுவேன்” என்று அடம்பிடிக்கிறார் ட்ரம்ப் காங்கிரஸ் மற்றும் செனட் சபையின் அனுமதி இல்லாமல் அதிபரே நேரடியாக நிதியை எடுத்துச் செலவிடவும் முடியாது அமெரிக்கச் சட்ட திட்டங்கள் அதற்கு இடம் கொடுக்காது ஆக திரிசங்கு சொர்க்கத்தில் சிக்கியிருக்கிறது அமெரிக்கா கடைசியாகக் கிடைத்திருக்கும் அப்டேட் இது கடந்த 9-ம் தேதி காங்கிரஸ் சபாநாயகர் நான்சி மற்றும் செனட் உறுப்பினர் சக் ஸ்கீமர் ஆகியோர் ட்ரம்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர் அவரும் வந்தார் ஆனால் அந்தக் கூட்டத்திலும் முடிவு கிடைக்கவில்லை “இது வேண்டாத வேலை” என்று நான்சி சொல்ல “காசு கொடுக்க முடியுமா முடியாதா” என்று ட்ரம்ப் கேட்க “முடியாது என்று சொல்லிவிட்டார் நான்சி “வேஸ்ட் ஆஃப் டைம் இனிமேல் இவர்களுடன் பேசமாட்டேன்” என்று வெளியேறிவிட்டார் ட்ரம்ப் இப்படியொரு அதிபரை இதுவரை பார்த்திராத அமெரிக்க மக்கள் `அடுத்து என்ன நடக்குமோ’ என்று அச்சத்தில் இருக்கிறார்கள்“காசு கொடுக்கவில்லை என்றால் அவசரநிலையைக் கொண்டுவந்து சுவரைக் கட்டுவேன்” என்றும் அலறவிடுகிறார் ட்ரம்ப் இதுவரை போர்க்காலங்களில் மட்டுமே அவசரநிலையை அமெரிக்கா பார்த்திருக்கிறது என்ன செய்வது அமெரிக்காவுக்கு இப்போது `போறாத காலம்’ 

Leave A Reply

Your email address will not be published.