`கூவிக்கூவி கூட்டணி சேர்க்கிறார் ஸ்டாலின்; நாங்கள் அப்படி அல்ல!’- எடப்பாடி பழனிசாமி பேச்சு

0 12

வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை அனைவரும் மிகவும் விறுவிறுப்பாகத் தயாராகி வருகின்றன இதற்கிடையில் பல கட்சிகளும் ஒருவர் பின் ஒருவராக தங்களின் கூட்டணி தொடர்பான விஷயங்களைத் தெரிவித்து வருகின்றனர் நேற்று தமிழகம் புதுச்சேரி மாநில பாஜக-வினரைத் தயார்படுத்தும்விதமாக தொகுதிவாரியாகப் பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் பேசிய மோடி “வாஜ்பாயின் வழியில் எப்போதும் பாஜக பயணிக்கும் இந்தக் கட்சி தனியாக நின்று வெற்றி பெற்றாலும் பாஜக அரசைக் கூட்டணிகளுடன் இணைத்துச் செயல்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம் பழைய நண்பர்களை நாங்கள் சந்தோஷமாக வரவேற்கிறோம் அந்தக் கட்சிகளுக்காக பாஜக-வின் கதவுகள் எப்போதுமே திறந்திருக்கும்” எனக் கூறினார் இந்த நிலையில் இன்று பிற கட்சிகளைச் சேர்ந்த ஆயிரம் பேர் அதிமுகவின் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது அதில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “ அதிமுக-வில் உள்ள அமைச்சர்களும் சரி நானும் சரி கிராமத்தில் இருந்து வந்தவர்கள் அதனால் கிராமத்தில் உள்ள மக்கள் படும் இன்னல்கள் பற்றி எங்களுக்கு நன்கு தெரியும் ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கிராம மக்களின் பிரச்னை என்றாலே என்னவென்று தெரியாது அதைத் தெரிந்துகொள்ளத்தான் தற்போது கிராமம் கிராமமாகச் சென்றுள்ளார் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு அதிமுக காரணமல்ல ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதே தேர்தல் அறிவிக்கப்பட்டது ஆனால் திமுக தான் தேர்தலை நடத்தவிடாமல் தடுத்தது அனைத்து கட்சியினரையும் கூவிக்கூவி அழைத்து கூட்டணி சேர்த்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின் எங்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டுக்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்கள்தான் மத்தியில் ஆட்சியில் வரவேண்டும் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களுக்கு யார் நன்மை செய்வார்களோ அவர்களைத்தான் நாங்கள் ஆதரிப்போம் தமிழ்நாட்டுக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் வகுத்துத்தந்த பாதையிலே இந்த ஆட்சி செயல்படும் என்று பேசினார்” எனப் பேசியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.