“என்ன நடந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது!” – துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்

0 9

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி ரத்த ஆறு ஓடியது `கொலைகார ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் பேரணியாகச் சென்ற மக்களை துப்பாக்கித் தோட்டாக்களால் வேட்டையாடியது தமிழக அரசின் கீழ் செயல்படும் காவல்துறை இந்த இரக்கமற்ற சம்பவத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜஸ்டின் ஐந்து மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்தார் இதுதொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணைக் குழுவை அமைத்தது அரசு அந்த ஆணையம் இதுவரை பலகட்ட விசாரணைகளை நடத்தி முடித்திருக்கிறது ஆனால் இடைக்கால அறிக்கையை இதுவரை வெளியிடவில்லைமே 28-ம் தேதி “ஸ்டெர்லைட் ஆலை `நிரந்தரமாக39 மூடப்படும்” என்று அரசாணை வெளியிட்டது தமிழக அரசு அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தனர் அதிகாரிகள் ஆனால் ஆலையைத் திறப்பதற்கு அனுமதி வாங்க பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியது ஆலை நிர்வாகம் இதைத் தொடர்ந்து தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு ஸ்டெர்லை ஆலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தது அந்த அறிக்கையில் “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது தவறு” என்று தெரிவித்தது ஆய்வுக்குழு அதை ஏற்றுக்கொண்டு `ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம்’ என்று பச்சைக்கொடி காட்டியது பசுமைத் தீர்ப்பாயம் உடனே “உண்மை வென்றுள்ளது” என்று அறிவித்தது ஸ்டெர்லைட் நிர்வாகம் “இரண்டு மாதங்களில் ஆலையைத் திறப்போம் என்று பேட்டி கொடுத்தார் ஆலையின் தலைமைச்செயல் அதிகாரி ஆனால் ஆலையைத் திறப்பதற்கு இடைக்காலத் தடைவிதித்தது சென்னை உயர் நீதிமன்றம் இதனால் ஆலையைச் சுற்றிவசிக்கும் மக்கள் சற்றே நிம்மதியடைந்தனர் இப்போது அந்தத் தடையையும் உச்ச நீதிமன்றம் நீக்கிவிட்டதால் ஆலையைத் திறக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன ஆளுங்கட்சி அமைச்சர்கள் “ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது” என்று தொடர்ந்து சொல்லி வருகின்றனர் சில நாள்களுக்கு முன்னால் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உரிய முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துவிட்ட நிலையில் அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது இந்தச் சூழலில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் “தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை கூட்டத்தைக் கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினோம் என்று அரசு சொல்வது உண்மையல்ல சரி மே 22-ம் தேதி கூட்டத்தைக் கலைப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் ஆனால் மே 23-ம் தேதி எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் இது திட்டமிட்ட படுகொலை என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும் தலையிலும் மார்பிலும் சுட்டுக்கொல்வதற்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா” என்று கேள்வி எழுப்பியவர்கள் “துப்பாக்கிச்சூட்டை நடத்தியது ஸ்டெர்லைட் நிர்வாகம்தான் தமிழக அரசையே அவர்கள்தான் வழிநடத்தி வருகின்றனர் 14 பேரைக் கொன்ற கொலைகாரர்கள் ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர்” என்று கொதித்தனர் தொடர்ந்து பேசியவர்கள் “ஸ்டெர்லைட் விதிமீறல்களில் ஈடுபடவில்லை என்று உறுதியாகச் சொல்லமுடியுமா தருண் அகர்வால் குழு சமர்ப்பித்த அறிக்கையில் கூட `ஸ்டெர்லைட் விதிமீறலில் ஈடுபடவில்லை’ என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை கடற்கரையிலிருந்து 17 கிலோ மீட்டர் தூரத்துக்குள் ஆலை இருக்கக் கூடாது என்று விதி இருக்கிறது ஆனால் 7 கிலோ மீட்டர் தூரத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிறதே இது விதிமீறல் இல்லையா ஸ்டெர்லைட் வந்தபிறகு தூத்துக்குடியில் மழைப்பொழிவு குறைந்திருக்கிறது நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது இதுபோன்ற பல பாதிப்புகளை நாங்கள் சந்தித்து வருகிறோம் ஆனால் `அபராதம் கட்டினால் போதும்’ என்று சொல்லி ஆலையைத் திறக்க அனுமதி கொடுக்கிறார்கள் அவர்களும் ஆலையைத் திறந்து விடுகிறார்கள்” என்று ஆதங்கப்பட்டனர் “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் கொல்லப்பட்ட போராளிகளுக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆலையைத் திறக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தூத்துக்குடி மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினர்துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கிளாஸ்டனின் அண்ணன் ஸ்டீபன் நம்மிடம் பேசினார் “அந்தத் துயரத்திலிருந்து இன்னும் முழுசா மீள முடியலைங்க ஒவ்வொரு முறையும் அந்தச் செய்தி கண்ணுல படும்போது மனசு வலிக்குது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால்தான் இறந்தவங்க ஆத்மா சாந்தியடையும் மேக்கே தாட்டூ அணை விவகாரத்தில் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தாங்க இல்லையா அதே மாதிரி ஸ்டெர்லைட் விவகாரத்திலும் சிறப்புத்தீர்மானம் கொண்டு வரணும் துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவு கொடுத்தவங்க மீது கடுமையான நடவடிக்கை எடுக்கணும் மொட்டைமாடியிலிருந்து நாயைத் தூக்கி வீசினால்கூட வழக்குப்பதிவு செய்றாங்க ஆனால் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய மறுக்கிறாங்க நாய்களுக்கு இருக்கும் மதிப்புகூட மனிதர்களுக்கு இல்லைஸ்டெர்லைட் ஆலை மூடி இருக்கிறதாச் சொல்றாங்க ஆனால் உள்ளே நிர்வாக வேலையெல்லாம் நடந்துக்கிட்டுதான் இருக்கு ஆலை எதிர்ப்பாளர்களை வளைக்கும் முயற்சியிலும் தீவிரமா ஈடுபட்டிருக்கு நிர்வாகம் ஆலை ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சி எடுத்துட்டு இருக்காங்க என்ன நடந்தாலும் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதிக்கக் கூடாது திறந்தால் மக்கள் மீண்டும் போராடுவாங்க” என்றார்

Leave A Reply

Your email address will not be published.