கொடநாடு விவகாரம்: இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து புகாரளிக்க உள்ளார் மு.க.ஸ்டாலின்

0 15

சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5.30 மணிக்கு சந்திக்க இருக்கிறார். கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஆளுநரிடம் அவர் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். கொடநாடு கொலை தொடர்பாக செய்தியாளர் மேத்யூ வெளியிட்ட ஆவணப்படம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என கூலிப்படை தலைவன் சயன் வாக்குமூலம் அளித்துள்ளான். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். நேற்று கூலிப்படை தலைவர் சயன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த வாளையார்  மனோஜ் ஆகியோரை தமிழக போலீசார் டெல்லியில் கைது செய்தனர். அவர்கள் இருவரும் இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5.30 மணிக்கு சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.