அப்சல் குருவுக்கு அஞ்சலி – குற்றப்பத்திரிகையில் டி.ராஜா மகள், கன்ஹையா குமார்!

0 6

கடந்த 2016- ம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில்  நாடாளுமன்ற தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட அப்சல்குருவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது  இந்த நிகழ்வின் போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்ஹையா குமார் உமர் காலித் உள்ளிட்ட சில மாணவர்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாகப் புகார் எழுந்தது தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் இவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது இது தொடர்பாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில் கன்ஹையாகுமார் உமர்காலித் அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியதாக டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிகையில்  கூறியுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டிராஜாவின் மகள் அபராஜிதாவின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது குற்றப்பத்திரிகையில் மொத்தம் 36 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதுஅரசியல் உள்நோக்கத்துடன் தன் மகளின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதாகவும் சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாகவும் டிராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் வழக்கை விசாரிக்கச் சிறப்பு படை நியமிக்கப்பட்டிருந்தது சுமார் 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி போலீஸ் அதிகாரிகள் பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்துக்கு ட்ரங்கு பெட்டியில் எடுத்து வந்தனர் 

Leave A Reply

Your email address will not be published.