கர்நாடகாவில் ‘ஆபரேஷன் லோட்டஸ் ‘ தொடங்கியது!- 3 காங். எம்.எல்.ஏக்கள் மாயம்?

0 6

கர்நாடகாவில்  காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராக இருந்து வருகிறார் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது  குமாரசாமியின் ஜனதாதள கட்சிக்கு 37 எம்எல்ஏ-க்கள் உள்ளனர் 78 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி குமாரசாமிக்கு ஆதரவளித்ததால் கர்நாடக முதல்வர் பதவி குமாரசாமிக்கு கை கூடியது  எனினும் பாரதிய ஜனதா கட்சி குமாரசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது தற்போது பாரதிய ஜனதா கட்சியின் 104 எம்எல்ஏ- க்களும் டெல்லி அருகே குர்கானில் உ ள்ள ரிசர்ட்டில் முகாமிட்டுள்ளனர் காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சியின் எம்எல்ஏ- க்களை விலைக்கு வாங்க முயல்வதாக பாரதி ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது அதே வேளையில்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக நீர் மேலாண்மைத்துறை அமைச்சர் சிவக்குமார் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆபரேஷன் லோட்டஸை தொடங்கியுள்ளதாகவும் மும்பையில் உள்ள ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள்  பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார் மேலும் குமாரசாமி பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ளவில்லை 3939 என்றும் சிவக்குமார்  குற்றம் சாட்டியுள்ளார் ஆனால் குமாரசாமியோ தன் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்கிறார்பாரதிய ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா கூறுகையில் 3939 எங்களுக்குக் குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை எங்கள் எம்எல்ஏ- க்களை விலைக்கு வாங்கக் காங்கிரஸ் முயல்கிறது அதன் காரணமாக டெல்லியில் குழுமியுள்ளோம் அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசித்து வருகிறோம் 3939 என்று காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் எனினும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 8 எம்எல்ஏ-க்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது கர்நாடகத்தில் ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் 

Leave A Reply

Your email address will not be published.