கடந்த ஆண்டு `பா.வளர்மதி’; இந்த ஆண்டு `பொன்னையன்’! -தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு!

0 40

ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் திருநாளையொட்டித் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் பங்காற்றி வருபவர்களுக்கு தமிழ்ப்பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்றத் தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர் பாவளர்மதி பெரியார் விருது பெற்றார் இதற்கிடையே இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன அதன்படி திருவள்ளுவர் விருது உள்பட ஒன்பது விருதுகளைப் பெறத் தகுதியானவர்களை தமிழக அரசு அறிவித்து உள்ளதுஇதுதொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட கீழ்க்காணும் விருதுகளைப் பெற தகுதியான பெருமக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் விருது பெறுவோர் பட்டியல்1 திருவள்ளுவர் விருது – எம்ஜி அன்வர் பாட்சா2 பெரியார் விருது           –  சிபொன்னையன்3 அம்பேத்கர் விருது       – டாக்டர் சிராமகுரு4 அண்ணா விருது           – பேராசிரியர் முஅய்க்கண்5 காமராசர் விருது          – பழநெடுமாறன்6 பாரதியார் விருது         –  பாவரசு மாபாரதி சுகுமாரன் 7 பாரதிதாசன் விருது     – கவிஞர் தியாரூ8 திருவிக விருது          –  முனைவர் குகணேசன்9 முத்தமிழ்க்காவலர் கிஆபெவிசுவநாதம் விருது – சூலூர்  கலைப்பித்தன்இந்த விருதுகள் வரும் 21-ந்தேதி மாலை 430 மணிக்குச் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருது வழங்கும் விழாவில் முதல்வரால் வழங்கப்படவுள்ளது விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ரூ1 லட்சத்துக்கான காசோலை ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் வழங்கப்படும் இதுதவிர இவ்விழாவில் முதிர்ந்த தமிழறிஞர்கள் 92 பேருக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத உதவித்தொகை ரூ2500 மற்றும் மருத்துவப்படி ரூ100 பெற அரசாணைகள் அளிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது 

Leave A Reply

Your email address will not be published.