`மோடி டீ விற்றதே இல்லை; நன்மதிப்பைப் பெறவே அப்படிச் சொன்னார்!’ – பிரவீன் தொகாடியா

0 4

பிரதமர் மோடியுடனான 43 ஆண்டுக்கால நட்பின்போது அவர் டீ விற்றதே இல்லை மக்களிடம் நன்மதிப்பைப் பெறவே அவர் அப்படிச் சொல்லியிருப்பார் என விஹெச்பி-யின் முன்னாள் செயல் தலைவரான பிரவீன் தொகாடியா கூறியிருக்கிறார் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சர்வதேச செயல் தலைவரான பிரவீன் தொகாடியா தற்போது அந்தாராஷ்டிரிய ஹிந்து பரிஷத் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார் தனது கருத்துகளால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் தொகாடியா அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் எண்ணம் பாஜக-வுக்கோ ஆர்எஸ்எஸ் அமைப்புக்கோ இல்லை என்று கூறியிருக்கிறார் இதுகுறித்து பேசிய பிரவீன் தொகாடியா “ராமர் கோயில் குறித்து பிரதமர் மோடி பேசிய பிறகு அடுத்த 5 ஆண்டுகளில் கோயில் கட்டப்படாது என ஆர்எஸ்எஸ் தலைவர் பைய்யாஜி ஜோஷி தெளிவாகச் சொல்லிவிட்டார் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை 125 கோடி இந்தியர்களை இருளில் வைத்திருக்கின்றன ஆனால் இந்துக்களிடையே தற்போது விழிப்பு உணர்வு ஏற்பட்டுவிட்டது இந்துக்களுக்காகப் புதிய அரசியல் கட்சித் தொடங்குவது குறித்த அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வெளியிடப்படும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றிபெற்ற அடுத்த நாளே ராமர் கோயில் கட்டும்பணி தொடங்கப்படும்’’ என்றார்பிரதமர் மோடியுடன் தனக்கு 43 ஆண்டுக்கால நட்பு இருப்பதாகக் கூறியிருக்கும் தொகாடியா தனது இளமைக் காலத்தில் வறுமை காரணமாக டீ விற்றுப் பிழைப்பு நடத்தியதாக அவர் கூறியிருப்பது பொய் என்றும் மக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவே அவர் அப்படி கூறியிருப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி சிறுவயதில் தனது தந்தையுடன் இணைந்து குஜராத்தின் வாத்நகர் ரயில்நிலையத்தில் டீ விற்றதாகவும் அந்தப் பகுதியைச் சுற்றுலாப் பகுதியாக மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.