போட்டிபோட்டு எடப்பாடியை வரவேற்ற அமைச்சர்கள்… களைகட்டிய மதுரை!

0 4

நெல்லையில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள திருச்சி வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாலை வழியாக விராலிமலை சென்று அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டைத் தொடங்கிவைத்துவிட்டு திருநெல்வேலிக்குப் பயணத்தைத் தொடர்ந்தார் மதுரை விருதுநகர் தூத்துக்குடி என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டிபோட்டு அமைச்சர்கள் கொடுத்த வரவேற்பால் திக்குமுக்காடிப் போனார் கொடநாடு விவகாரம் பற்றி எதிர்க் கட்சிகள் கிளப்பிவரும் புகாரினால் சஞ்சலத்தில் இருந்தவருக்கு இந்த வரவேற்பு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்பதை அவருடைய முகமும் பேச்சும் வெளிப்படுத்தியது மதுரை மாவட்டத்தில் மட்டும் மேலூர் பள்ளப்பட்டி பாண்டி கோயில் ரிங்ரோடு விரகனூர் ரிங் ரோடு மண்டேலா நகர் கப்பலூர் திருமங்கலம் கள்ளிக்குடி என்று மக்களைச் சாலையோரம் நிறுத்தி பால்குடத்துடன் வரவேற்பு அளித்தனர் விரகனூர் ரிங் ரோட்டில் சிறிது நேரம் பேசினார் எடப்பாடி அமைச்சர் செல்லூர் ராஜு தரப்பினர் பால்குடத்துடன் வரவேற்பு அளித்ததோடு விலகிக் கொண்டனர் மற்றோர் அமைச்சரான ஆர்பிஉதயகுமாரோ புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவுடன் இணைந்து திருமங்கலம் தொகுதியில் பெரிய அளவில் வரவேற்பைக் கொடுத்ததோடு நில்லாமல் கள்ளிக்குடியில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார் இதெல்லாம் முதல்வர் எடப்பாடிக்கு சர்ப்ரைஸ்      முதல்நாள் ஓபிஎஸ்ஸை வைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத் தொடக்க விழாவை மதுரையில் நடத்தியபோது மாநகரக் கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் ஆர்பிஉதயகுமார் பெயரைப் புறக்கணித்திருந்தார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆனாலும் விழாவில் கலந்துகொண்டார் உதயகுமார் இந்த நிலையில்தான் நெல்லை செல்லும் எடப்பாடியை வைத்து குறுகிய காலத்துக்குள் பிரமாண்ட விழாவை கள்ளிக்குடியில் நடத்தி செல்லூர் ராஜுக்குத் தன் பவரைக் காட்டினார் ஆர்பிஉதயகுமார் இந்த விழாவில் செல்லூர் ராஜு கலந்துகொள்ளவில்லை மதுரையோடு நின்றுகொண்டார்      சமீபகாலமாக ஆர்பிஉதயகுமாருடன் செல்லூர் ராஜுவும் புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவும் மோதல் அரசியல் நடத்தி வருகிறார்கள் இதற்குப் பதிலடியாக நலத்திட்ட விழா சைக்கிள் பேரணி எடப்பாடி ஓபிஎஸ் ஆகியோருக்கும் பிரமாண்ட விழா எடுத்து மதுரையில் அதிமுக-வினரை உற்சாகப்படுத்தி வருகிறார் உதயகுமார் அந்த வகையில்தான் செல்லூர் ராஜுவுக்குப்  பதிலடி கொடுக்கும் வகையில் மறுநாளே எடப்பாடிக்குக் கள்ளிக்குடியில் நன்றி தெரிவிக்கும் விழா எடுத்து அவரை உச்சி குளிரவைத்துவிட்டார் அது மட்டுமல்லாமல் மீனாட்சியம்மன் திருப்பரங்குன்றம் திருமோகூர் கோயில்களின் தலைமை அர்ச்சகர்களை வரவழைத்து எடப்பாடி முன் மந்திரங்களை ஓதி பிரசாதம் வழங்க வைத்ததால் பக்தி பரவசமாகிவிட்டார் கள்ளிக்குடியில் 70 அடி கம்பத்தில் கொடியேற்றி வைத்துவிட்டு தன் ஆட்சி சாதனைகளைப் பற்றிப் பேசிய எடப்பாடி பழனிசாமி “தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் புதிய தாலுகாக்களை உருவாக்கியவர் ஆர்பிஉதயகுமார் கஜா புயல் உட்பட பல பேரிடர் கால நடவடிக்கைகளில் மிகவும் ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செயல்பட்டார் அவரால் வருவாய்த் துறை பெருமைபெற்று வருகிறது என்று புகழ்ந்துபேச நெகிழ்ந்தார் ஆர்பிஉதயகுமார்இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட எல்லையில் ராஜேந்திர பாலாஜியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடம்பூர் ராஜுவும் பிரமாண்ட வரவேற்பு அளித்து நெல்லை செல்லும் வரை திக்குமுக்காட வைத்துவிட்டனர் நெல்லையிலும் பெண்கள் முளைப்பாரியுடன் வரவேற்று திக்குமுக்காடச் செய்துவிட்டனர்  

Leave A Reply

Your email address will not be published.