பி.ஜே.பி-யை எதிர்த்து டெல்லியில் இன்று சந்திரபாபு நாயுடு தர்ணா!

0 7

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசுக்கு எதிராக இன்று (11-ம் தேதி) டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தத் தர்ணா போராட்டத்தில் அரசியில் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொள்ள இருக்கின்றனர்மத்தியில் ஆளும் பிஜேபி கூட்டணியில் அங்கம் வகித்திருந்த தெலுங்குதேசம் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது இதையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி-யை எதிர்க்க வலுவான கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறார் அக்கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு இதற்காக நாடு முழுவதும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களையும் தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசி வருகிறார் இது ஒருபுறமிருக்க மறுபுறம் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராக இன்று டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளார் இந்தத் தர்ணா போராட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதுஇந்த நிலையில் நேற்று ஆந்திரா வந்த பிரதமர் மோடிக்கு எதிராகப் பல்வேறு இடங்களில் கறுப்புக் கொடி போராட்டம் நடைபெற்றதுடன் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.