`கடைசி நிமிடத்துக்குள் கொடுத்த வாக்குறுதிகளைப் பா.ஜ.க நிறைவேற்றும்!’- இல.கணேசன்

0 6

`2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வரும் கடைசி நிமிடத்துக்குள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் அதிரடியாகப் பாஜக அரசு நிறைவேற்றும்39 எனப் புதுக்கோட்டையில் இலகணேசன் கூறினார் புதுக்கோட்டை அவதூத வித்தியா பீட கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் இலகணேசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது  “பாஜக ஆட்சியின் தாக்கத்தில் ஏற்பட்ட பயத்தால் பாதிக்கப்பட்ட பல கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்த்து வருகின்றனர் இதற்குப் பின்னால் தேச விரோத சக்திகளின் தூண்டுதல்கள் மற்றும் அந்நிய சக்திகள் நிதி உதவியும் உள்ளது 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வரும் கடைசி நிமிடத்துகுள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் அதிரடியாகப் பாஜக அரசு நிறைவேற்றும்தேர்தல் அறிவிப்பு வரும் கடைசி நிமிடத்துக்குள் சில அதிரடி அறிவிப்புகள் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது சில வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினாலும் மீண்டும் மக்கள் வாய்ப்பு அளித்தால் அனைத்தும் நிறைவேற்றப்படும் அதிகாரபூர்வ தேர்தல் கூட்டணியை பாஜக நடத்தாவிட்டாலும் அதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளோடு பாஜக நிர்வாகிகள் ஆங்காங்கே இயற்கையாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் அதே நேரத்தில் சிறிய கட்சியோ பெரிய கட்சியோ யாரையும் மிரட்டிப் பணிய வைத்துத் தேர்தல் கூட்டணியை அமைக்க முடியாது இதுபோன்ற கருத்துகளை கூறுபவர்கள் அரசியல் குறித்து தெரியாதவர்கள் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தால் அவருக்குக் கறுப்புக்கொடி காட்டுவோம் என்றும் வராவிட்டால் தமிழகத்தைப் புறக்கணித்துவிட்டார் என்றும் சில கட்சிகள் மாற்றி மாற்றிப் பேசி வருகின்றனர் பாஜக குறித்து தம்பிதுரையின் கருத்துகள் அவரின் சொந்தக் கருத்து அவருக்கு அவர் கட்சியில் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை எங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாடு உள்ளது வைகோ தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை கூறி வருகிறார்அவரை மக்கள் புறக்கணித்து விட்டனர் என்றார்

Leave A Reply

Your email address will not be published.