“புதிய அரசியல் படைப்போம்!” – காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா அழைப்பு!

0 8

காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பிரசாரம் மட்டுமே செய்துவந்த அக்கட்சியின் முன்னாள்  தலைவர் சோனியாவின் மகளான பிரியங்கா காந்தி தற்போது உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் கட்சியில் பிரியங்கா காந்தி மிகப்பெரிய அளவில் பொறுப்பேற்றிருப்பது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது இதைத் தொடர்ந்து அங்கு கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வரும் பிரியங்கா காந்தி இன்று (11-ம் தேதி) லக்னோ வரவிருப்பதாகத் தெரிவித்துள்ளதுடன் புதிய அரசியல் அத்தியாயம் படைப்பதற்கு அனைவரும் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்இதுதொடர்பான அறிக்கை ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது “நான் இன்று (11-ம் தேதி) லக்னோ வருகிறேன் நாம் அனைவரும் இணைந்து புதிய அரசியலை ஏற்படுத்துவோம் அதில் நீங்கள் அனைவரும் கட்டாயம் இடம்பெற வேண்டும் இளைஞர்கள் மகளிர் மற்றும் பொதுமக்கள் என அனைவரின் குரலும் இனி கேட்கப்படும் நாம் புதிய அரசியல் அத்தியாயம் படைப்போம் வாருங்கள் என்று அதில் காங்கிரஸ் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்  மேலும் அதில் “உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர் இதையறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன் கள்ளச்சாராயம் முற்றிலும் தவறானது அது அழித்தொழிக்கப்பட வேண்டியது இதனால் இரண்டு மாநிலங்களில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன இரண்டு மாநிலங்களிலும் சட்டவிரோத மதுபானத் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன மாநில அரசுகளின் ஆதரவில்லாமல் இத்தொழிற்சாலைகள் இயங்க வாய்ப்பில்லை இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்கும் என்று நான் நம்புகிறேன் மேலும் அந்தக் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்  

Leave A Reply

Your email address will not be published.