`திரிணாமுல் காங். எம்.எல்.ஏ சுட்டுக் கொலை!’ – மேற்கு வங்க அரசு மீது மத்திய அமைச்சர் பாய்ச்சல்

0 7

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதால் மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு சீர்குலைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் அம்மாநில அரசின் தோல்வியை காட்டுவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நகரி குப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் மண்டலப் பயிற்சி மையம் செயல்பட்டுவருகிறது இங்கு பயிற்சி முடித்த 105 பெண்கள் உட்பட 1100 துணை உதவி ஆய்வாளர்களுக்கான 9-வது பயிற்சி நிறைவு விழா 10-ம் தேதி நடைபெற்றது இதில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டார் அவரை வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் மற்றும் எஸ்பி பிரவேஷ்குமார் ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் பயிற்சியில் சிறந்து விளங்கிய வீரர்களுக்குச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கிக் கௌரவித்தார் பின்னர் அவர் பேசுகையில் “மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பணி மகத்தானவை இந்த வீரர்கள் திறமையாகவும் நுண்ணறிவுடனும் செயல்பட வேண்டும் இங்கு பயிற்சி முடித்த அனைவரும் விரைவில் நாட்டில் உள்ள விமான நிலையம் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள்’’ என்றார்இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு “மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் இச்சம்பவம் கண்டிக்கத்தக்கது அம்மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை பாதுகாப்பு சீர்குலைக்கப்பட்டுள்ளது இந்தச் சம்பவம் மேற்கு வங்க அரசின் தோல்வியைக் காட்டுகிறது பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது ஒவ்வொரு மாநில அரசுகளின் கடமையாகும் இதற்கான உதவிகளைச் செய்ய மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது’’ என்று கூறினார்

Leave A Reply

Your email address will not be published.