60 லட்சம் பேருக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு: அரசாங்க பணத்தை வைத்து சட்ட விரோத தேர்தல் பிரசாரம்: திமுக குற்றச்சாட்டு

0 5

சென்னை: தேர்தலை முன்வைத்தே 60 லட்சம் பேருக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக அரசாங்க பணத்தை வைத்து தேர்தல் பிரசாரம் செய்கின்றனர் என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது. திமுக எம்எல்ஏ பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவை வளாகத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு இந்தாண்டு நிதிநிதி அறிக்கையில் 18 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறியுள்ளது. 42 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், 1200 கோடி சுமையை முதல்வர் ெசலுத்துவது பொறுப்பற்ற செயல். தேர்தல் பிரசாரத்திற்கு அளிப்பது எந்த வகையில் நியாயம். நிதி மேலாண்மை திட்டத்தில் வருவாய் பற்றாக்குறை இருப்பது தான். 2013 வரை கட்டுப்பாட்டில்  இருந்த வருவாய் பற்றாக்குறை. அதன்பிறகு பயங்கரமாக அதிகரித்துள்ளது. பணத்தை கடன் வாங்கி கடன் வாங்கி செலவழித்து வருகின்றனர். 2014க்கு முன்பு 5 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் பற்றாக்குறை கிடையாது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் வருவாய் பற்றாக்குறை அதிகரித்து தான் வருகிறது. இவர்கள் கொடுக்கும் கணக்கிற்கு மதிப்பில்லை. காரணம். திடீர், திடீரென்று ஒரு அறிவிப்ைப வெளியிட்டு செலவை அதிகரிக்கின்றனர். கடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிப்பதற்கு பதிலாக திடீரென இப்படி அறிவிக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் கடந்த பட்ஜெட் தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து கூடுதல் செலவை காட்டுகிறது. இதை அவர்கள் கணக்கில் சேர்ப்பதில்லை. சட்டமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்த நிதி நிலை அறிக்கையை குப்பை அறிக்கையாக்கி விட்டனர்.கஜா புயல் பாதிக்கப்பட்ட 60 லட்சம் பேருக்கு தலா 2 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டு எவ்வளவு நாட்கள் ஆகிறது. அது வரை காட்டாத அக்கறையை இன்று திடீரென காட்டி செலவு செய்தால் தேர்தல் பிரசாரமாக தான் பார்க்க வேண்டும். சட்ட விரோதமாக அரசாங்க பணத்தை வைத்து தேர்தல் பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.