“10 தொகுதி தர்றோம்… 21 தொகுதிகளுக்குத் தேர்தல் கூடாது!’’ அ.தி.மு.க வீசும் அஸ்திரம்

0 4

அதிமுக – பிஜேபி கூட்டணி அமையாவிட்டால்தான் ஆச்சர்யம் மற்றபடி கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் இரண்டு கட்சிகளிடையே மறைமுகமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது இந்தக் கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் பொதுக் கூட்டம் முதல் நாடாளுமன்றம் வரையில் பிஜேபி-க்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்கிறார் நாடாளுமன்ற மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை அதிமுக கூட்டணியில் 10 தொகுதிகளுக்கும் மேல் கேட்கிறது பிஜேபி தங்கள் அணியில் தொடர்ந்து இருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் தங்களது ஒதுக்கீட்டில் இருந்துதான் இடங்களை ஒதுக்க வேண்டும் அதோடு கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட பிஜேபி நினைக்கிறது இதற்காகத்தான் பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்டு டிமாண்ட் செய்து வருகிறது எடப்பாடி ஆட்சிக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்கள் திரண்டபோது அவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன ஆளுநரிடம் தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ-க்கள் கொடுத்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது சில நாள்கள் கழித்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது இப்படி எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவாக பிஜேபி செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனநாடாளுமன்றத் தேர்தலோடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் உட்பட 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அந்த 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்குமா என்கிற சந்தேகம் இப்போது எழுந்து நிற்கிறது “பிஜேபி கேட்கும் 10-க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளைத் தருகிறோம் ஆனால் 21 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலோடு நடக்க கூடாது’’ என அதிமுக நிபந்தனை போட்டிருக்கிறது எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன ஏற்கெனவே இடைத்தேர்தல்களைத் தள்ளி வைத்ததுபோல இப்போதும் இடைத்தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் பிஜேபி-யிடம் நிபந்தனை விதித்திருக்கிறார்கள்இதைக் குற்றச்சாட்டாகவே வைத்துவருகிறார் ஸ்டாலின் “21 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்தாமல் ஒத்திப்போடுவது அதிமுக – பிஜேபி கூட்டணி பேரங்களில் ஒன்று’’ எனச் சொல்லியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ்அழகிரி “தமிழகத்தின் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடத்தாமல் தள்ளி வைப்பதற்கு அதிமுக தலைமை பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன’’ எனச் சொல்லியிருக்கிறார் கேஎஸ்அழகிரி இதேபோல திமுக கூட்டணிக் கட்சியில் இருக்கிற அனைத்து கட்சிகளும் இதே விஷயத்தை அறிக்கையாக வெளியிட்டிருக்கின்றன “தமிழ்நாட்டில் 10 சதவிகித சட்டசபைத் தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல் முறை’’ எனச் சொல்லியிருக்கிறார் திருமாவளவன் கடந்த 15 மாதங்களாகச் சட்டப்பேரவை உறுப்பினர்களே இல்லாமல் அந்தத் தொகுதிகள் காலியாக இருக்கின்றன21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் குறைந்தது 6 தொகுதிகளில் அதிமுக ஜெயித்தாக வேண்டும் அப்போதுதான் ஆட்சி தொடரும் நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டசபைத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறது அதிமுக அதனால்தான் இடைத்தேர்தலை தள்ளி வைக்க நிபந்தனை போடுகிறது

Leave A Reply

Your email address will not be published.