நாடாளுமன்றத் தேர்தலைப் பாதிக்குமா குஜ்ஜார் போராட்டம்…?

0 4

ராஜஸ்தான் மாநிலத்தில் கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால் அந்த மாநிலத்தில் போக்குவரத்து முடங்கியுள்ளதுகல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தங்களுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து குஜ்ஜார் இனத்தவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர் ஒருகட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாக அப்போது ஆட்சியில் இருந்த பிஜேபி அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டதுஇதையடுத்து 39குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்39 என அம்மாநில அரசு அப்போது வாக்குறுதி அளித்தது 2017-ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது ஆனால் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இடஒதுக்கீடு வழங்க இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜேபி தோல்வியடைந்து அங்கு தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்துள்ளது முதல்வராக அசோக் கெலாட் பதவி வகிக்கிறார்நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மாநில அரசு ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தங்கள் சமூகத்திற்கு 5 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி குஜ்ஜார் மக்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் ரயில் மறியல் சாலை மறியல் போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டுள்ளனர் இதனால் ராஜஸ்தான் வழியாக வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில் போக்குவரத்தும் முக்கியச் சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடெல்லி- மும்பை மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது குறிப்பிட்ட சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன வேறு சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனஇந்தப் போராட்டத்தில் குஜ்ஜார் அந்தோலன் அமைப்பினர் தீவிரமாக உள்ளனர் தோல்பூர் என்ற இடத்தில் கடந்த 3 நாள்களாகப் போராட்டம் தொடர்ந்து நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது போராட்டக்காரர்கள் பல இடங்களில் வாகனங்களுக்குத் தீவைத்து எரித்தனர்போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர் என்றாலும் அவர்கள் கலையாமல் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் உருவாகி வன்முறையாக வெடித்தது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் தோல்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவல்துறை வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர் தேசிய நெடுஞ்சாலையை மறிப்பதோடு மட்டுமல்லாமல் வழியில் சிக்கித்தவிக்கும் பயணிகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் காவல்துறை கண்காணிப்பானர் அஜய் சிங் தெரிவித்தார் இதையடுத்து போலீஸார் ஆக்ரா – மொரேனா நெடுஞ்சாலையில்  துப்பாக்கிச் சூடு நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க வேண்டியநிலை உருவானதாகவும் அவர் குறிப்பிட்டார் கண்ணீர்புகைக் குண்டுகளும் வீசப்பட்டன  போலீஸாரை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சிலும் ஈடுபட்டனர் இதில் காவலர்கள் 3 பேருக்கும் பயணிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன் 7 ரயில்கள் வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டனசவாய் மாத்தூர் என்ற இடத்தில் ரயில் தண்டவாளங்களில் தொடர்ந்து 4-வது நாளாக குஜ்ஜார் சமூகத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி மாநில அரசு வருகிறது இதுவரை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன பண்டி மாவட்டம் ஹிந்தோலி – உனியாரா மாநில நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது போராட்டக்காரர்களின் வன்முறைச் செயல் பற்றி கருத்துத் தெரிவித்த முதல்வர் அசோக் கெலாட் “கல்வீச்சு வாகனங்களுக்கு தீவைத்தல் போன்ற செயல்கள் நியாயமற்றவை போராட்டம் நடத்த உரிமையுண்டு என்றாலும் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபடக்கூடாது போராட்டக்காரர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது இதுதொடர்பாக கமிட்டி ஒன்றையும் அமைத்துள்ளது போராட்டக்காரர்களுடன் சமூக விரோத சக்திகளும் இணைந்துள்ளன வன்முறைச் சம்பவம் குறித்து காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் விசாரணை நடத்துவார்கள் குஜ்ஜார் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா 39வன்முறையைக் கைவிட்டு மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் இதற்கிடையே போலீஸார் கூறுகையில் போராட்டக்காரர்கள் எங்கள் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர் அதைத் தொடர்ந்தே நாங்கள் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தோம் ஒட்டுமொத்த வன்முறைச் சம்பவம் குறித்த வீடியோ எங்களிடம் உள்ளது வன்முறையைத் தூண்டியர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார் என்றனர் எனினும் போலீஸாரின் குற்றச்சாட்டை பைன்ஸ்லா மறுத்துள்ளார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆத்திமூட்டும் வகையில் போலீஸாரின் நடவடிக்கை இருந்தது என்று அவர் குறிப்பிட்டார் இந்த வன்முறையைத் தொடர்ந்து தோல்பூரின் பல்வேறு இடங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கூடுதல் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர் இதனிடையே மாவட்ட கலெக்டர் நேஹா கிரி அங்குள்ள நிலைமை குறித்து ஆய்வு மேற்கொண்டார் முன்னதாக சனிக்கிழமையன்று மாநில சுற்றுலா அமைச்சர் விஷ்வேந்திர சிங் மூத்த ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் கே பவன் ஆகியோர் பைன்ஸ்லா மற்றும் அவரின் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர் எனினும் அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை இதையடுத்து குஜ்ஜார் பிரிவினரின் போராட்டம் நீடிக்கிறது தங்களின் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரக்ரள் தெரிவித்துள்ளனர் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இனத்தவர்களின் போராட்டம் மாநில அரசுக்கும் மத்திய பிஜேபி அரசுக்கும் மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது தவிர இந்தப் போராட்டத்தின் பின்னணியில் பிஜேபி-க்கு தொடர்பு இருக்குமா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் ஏனென்றால் ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பிஜேபி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது தற்போது அங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக சிலர் இந்தப் போராட்டத்தை தூண்டி விட்டிருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுவதாக அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர் எப்படி இருப்பினும் குஜ்ஜார் போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தும் என்பது உறுதி

Leave A Reply

Your email address will not be published.