` ரூபாய் நோட்டை நிறம் மாற்றியதைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்?’ – தகித்த தம்பிதுரை

0 21

இன்று நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் தொடர்பான விவாதத்தின்போது மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டையும் பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்அவர் பேசும்போது  “விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ6000 வழங்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது அது போதுமா அவர்களுக்கு ஒரு நாளுக்குப் பல பிரச்னைகளை அவர்கள் சந்திக்கிறார்கள் அப்படியிருக்க நீங்கள் அறிவித்துள்ள இந்த தொகை போதாது விவசாயிகளுக்குப் பணம் வழங்க வேண்டும் என்ற அரசின் திட்டம் பாராட்டத்தக்கது ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை போதுமானது இல்லை ஒரு ஆண்டுக்குக் குறைந்தது 12000 ரூபாயாவது வழங்க வேண்டும் நூறுநாள் வேலை திட்டத்தின் கொள்கையை மாற்றியது முற்றிலும் தோல்வியில் முடிந்துள்ளது நான் கிராமப்புறங்களுக்குச் செல்லும்போது விவசாயிகள் என்னிடம் புகார் தெரிவிக்கின்றனர் பல இடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்து நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு வருமானம் கிடைக்கவிடாமல் செய்கின்றனர் ஏழைப் பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும் சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டுவந்த தூய்மை இந்தியா திட்டம் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது தூய்மை இந்தியா திட்டம் பல சாதனைகளை செய்துள்ளதாகக் கூறும் உங்களின் கருத்தை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் உங்களின் மேக் இன் இந்தியா திட்டம் சரி மேட் இன் இந்தியா எங்கே இந்தியாவில் பெரும்பாலும் சீனப் பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது நாம் எங்கு சென்றாலும் சீனப் பொருள்கள் மட்டுமே அதிகம் கண்ணில் படுகிறது இதனால் இந்திய தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்  ‘மேக் இன் இந்தியா  மேட் இன் இந்தியா போல பை இன் இந்தியா’ என்ற இந்திய பொருள்களை வாங்க வேண்டும் என்ற திட்டம் கொண்டுவர வேண்டும் இந்தியச் சந்தையில் சீனப் பொருள்களுக்குத் தடை விதிக்க வேண்டும் சீனா மற்றும் வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளால் இந்தியாவின் ஜவுளி உற்பத்தி நலிவடைந்துவிட்டது பணமதிப்பிழப்பு நடைமுறை எதற்காகக் கொண்டுவரப்பட்டது பல லட்சியங்களின் மூலம் அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் அவற்றில் ஒன்றாவது நிறைவேறியதா நிறைவேறியதுபோல் எனக்கு ஒன்றும் தெரியவில்லை முதலில் 500 ரூபாய் நோட்டு செல்லாது எனத் தடை விதித்தீர்கள் பிறகு வேறு நிறத்தில் அதே மதிப்புள்ள புது நோட்டை வெளியிடுகிறீர்கள் இதில் என்ன மாறுபாடு உள்ளது இதனால் ஏழை மக்கள் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது மட்டுமே மிச்சம் முதன்முதலில் ஜிஎஸ்டியைக் கொண்டு வந்தது காங்கிரஸ்தான் என பாஜக குற்றம் சுமத்துகிறது பாஜக-வின் ஜிஎஸ்டி தவறானது என காங்கிரஸ் குற்றம் சுமத்துகிறது இவர்களின் சண்டை மற்றும் குற்றச்சாட்டு மிகவும் குழந்தைத்தனமாக உள்ளது தங்கள் மாநிலத்துக்கு முறையாக நிதி வழங்கவில்லை என ஆந்திர எம்பி-க்கள் இன்று காலை முதல் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்  ஜிஎஸ்டி என்ற பெயரில் மாநிலத்தின் மொத்தப் பணமும் மத்திய அரசிடம் இருக்கும்போது மாநிலங்களுக்கு எப்படி பணம் கிடைக்கும் இதுவரை மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய் வர வேண்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போதும் தற்போது முதல்வரும் பலமுறை நிதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர் ஆனால் இதுவரை மத்திய அரசு எந்தப் பதிலும் அளிக்கவில்லை ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தானே புயல் கஜா புயல் போன்றவற்றின் நிதியை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறி தன் உரையை முடித்தார் 

Leave A Reply

Your email address will not be published.