`பாகிஸ்தானுக்குச் செல்லும் நமது பங்கு தண்ணீரை நிறுத்துவோம்!’ – நிதின் கட்கரி திட்டவட்டம்

0 4

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாகிஸ்தானுக்கு நீர் ஆதாரங்களாக விளங்கும் நதிகளைத் தடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த 14 -ம் தேதி தீவிரவாதி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர் இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு கண்டனங்களைத் தெரிவித்தன இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த நாளே பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (high-powered Cabinet Committee) பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த 39வர்த்தகத்துக்கு உகந்த நட்புறவு நாடு39 எனும் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ததுஇந்தியாவின் பங்கிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை மடைமாற்றி இந்திய நதிகளுக்குத் திருப்பிவிட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது  கடந்த 2016-ம் ஆண்டு 18 ராணுவ வீரர்களைப் பலிகொண்ட உரி தீவிரவாதத் தாக்குதலின்போதே பாகிஸ்தானுக்குச் செல்லும் மூன்று நதிகளை மடைமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டது ஆனால் செயல்படுத்தவில்லைஇந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேசத்தில் பக்பாத் என்னும் பகுதியில் கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி 39பாகிஸ்தானுக்கு செல்லும் மூன்று நதிகளின் வழி மாற்றியமைக்கப்படும்’ என ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார் “இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் அப்பகுதியில் பாயும் நதிகளில் இரு நாடுகளும் தலா 3 நதிகளின் நீரைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது இருப்பினும் இந்தியாவின் பங்கான 3 நதிகள் பாகிஸ்தானுக்குள் பாய்ந்து வருகின்றன நமக்கு உரிமையான அந்த நதிகள் பாகிஸ்தானுக்கு நீர் ஆதரமாக விளங்குகின்றன மூன்று நதிகளையும் திசைதிருப்பி யமுனையில் சேரும் விதமாகத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த உள்ளோம் எனவே யமுனையிலும் நீர்வளம் அதிகரிக்கும்’’ என்று நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார் 1960ம் ஆண்டு வகுக்கப்பட்ட இந்துஸ் நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தின் படி ரவி உள்ளிட்ட 3 ஆறுகளின் தண்ணீரை இந்தியா பயன்படுத்திக் கொள்ள உரிமை இருப்பதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டார் ஆனால் அந்த ஒப்பந்தத்தின் படி அந்த நதிகளின் நீரை இந்தியா பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கட்கரி `மூன்று நதிகள் இடையே அணைகள் கட்டத் திட்டமிட்டிருப்பதாகவும் ரவி ஆற்றின் குறுக்கே ஷாபூர் – கண்டி இடையேயான பகுதியில் அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது மேற்கூறிய 3 திட்டங்களும் தேசியத் திட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன’ என்று பதிவிட்டிருக்கிறார் நிதின் கட்கரியின் இந்த அறிவிப்புக்கு பலர் வரவேற்பும் பலர் எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர் உங்களின் கருத்தை இங்கே பதிவுசெய்யலாம் 

Leave A Reply

Your email address will not be published.