இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி கைது!

0 3

தேர்தல் பரபரப்பும் பொள்ளாச்சி பயங்கரமும் ஒருபுறமிருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ச்சியான சர்ச்சைகள் கிளம்பிய சிலைக்கடத்தல் பற்றிய புகார்களும் கண்டுபிடிப்புகளும் மீண்டும் எழ தொடங்கியிருக்கின்றனஇந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி இன்று காலை அவரது வீட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார் காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலில் சிலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தங்கத்தில் மோசடி செய்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்இது தொடர்பாக ஏற்கெனவே அப்போதைய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தார் அவருடைய பதவி பறிக்கப்பட்டது அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோசடியில் மற்றவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா எனப் பல கட்டங்களாக விசாரணை நடந்தது அந்த விசாரணையின் ஒரு பகுதியாகவே தற்போது வீர சண்முகமணி கைது செய்யப்பட்டிருக்கிறார் பொன் மாணிக்கவேல் தலைமையில் உள்ள சிறப்புப் பிரிவினர்தான் இவரை கைது செய்திருக்கிறார்கள் இன்னும் சிலரும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.