‘பால்கோட் தாக்குதலை அரசியலாக்கியதால் பா.ஜ.க-வில் சேர்ந்தேன்!”- சோனியா உதவியாளர் சொல்கிறார்

0 3

பால்கோட் தாக்குதலை அரசியலாக்கியதால் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளதாக, சோனியா காந்தியின் முன்னாள் உதவியாளரும் காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளருமான டாம் வடக்கன் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த டாம் வடக்கன், கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்துவந்தார். இவர், சோனியா காந்திக்கு மிக நெருக்கமானவர். சோனியாவின் முக்கிய உதவியாளர்களுள் ஒருவரும்கூட. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, பல முக்கிய முடிவுகளை இவரிடம் ஆலோசனை கேட்ட பிறகே சோனியா  எடுப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருக்கு நெருக்கமாக இருந்துவந்த டாம் வடக்கன், தற்போது அந்தக் கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை நேற்று சந்தித்த டாம் வடக்கன், தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டார். ”புல்மாவா தாக்குதலையடுத்து, இந்திய விமானப்படை பால்கோட்டில் நடத்திய தாக்குதலை சந்தேகக் கண்ணோடு நோக்குகிறது காங்கிரஸ் கட்சி. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படும்போது, அந்தக் கட்சியில் இருப்பதில் அர்த்தம் இல்லை. கனத்த இதயத்துடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விடைபெறுகிறேன். 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் ராகுல் காந்தி, தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறியும் குணம் கொண்டவர்”  என்று கூறியுள்ளார்.டாம் வடக்கன், திருச்சூரைச் சேர்ந்தவர். மீடியா கன்சல்ட்டன்டாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர். ஆனால், அடிப்படை அரசியலில் முன் அனுபவம் இல்லாதவர். 

Leave A Reply

Your email address will not be published.