மக்களவைத் தேர்தல் 2019 : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர் தொகுதிகளில் போட்டி

0 3

சென்னை : மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர் தொகுதிகளில் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் போட்டி மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் – 10,மதிமுக – 2, இந்திய கம்யூனிஸ்ட்-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, விடுதலை சிறுத்தைகள்- 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1 ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு எட்டப்பட்டுள்ளது. தொகுதிகள் ஒதுக்கப்படா விட்டாலும், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.