மக்களவைத் தேர்தல் 2019 : காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரம்

0 1

சென்னை : மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் போட்டி மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, தேனி, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் – 10,மதிமுக – 2, இந்திய கம்யூனிஸ்ட்-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, விடுதலை சிறுத்தைகள்- 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1 ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு எட்டப்பட்டுள்ளது. தொகுதிகள் ஒதுக்கப்படா விட்டாலும், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.