“பொள்ளாச்சி வழக்கு சி.பி.ஐ-க்குப் போன பிறகு சைபர் கிரைம் போலீஸ் அழைப்பது ஏன்?” – கோபால் வழக்கறிஞர்

0 4

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் செய்தி வெளியிட்ட விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபாலை பழைய காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரம் குறித்து நக்கீரன் ஆசிரியர் கோபால் பேசிய வீடியோ தமிழகம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது அந்த வீடியோவில் குற்றத்தில் தொடர்புடையவர்கள் குறித்தும் அவர்களுக்கான அரசியல் பின்னணி குறித்தும் நக்கீரன்  கோபால் வெளிப்படையாகப் பேசியிருந்தார் இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் அழுத்தமாகப் பேசப்பட்டது அதோடு நக்கீரன் இதழிலும்  விரிவாக கட்டுரையும் வெளியானது இது தொடர்பாக செய்தி வெளியிட்டது குறித்து  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்   காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார் அந்தப் புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபாலை பழைய கமிஷனர் அலுவலகத்தில் 15-ம் தேதி (இன்று) ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது ஆனால் இன்று நக்கீரன் கோபால் ஆஜராகவில்லை இதைத் தொடர்ந்து அவருடைய வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜராகி கடிதம் ஒன்றை  அளித்துள்ளார் இது குறித்து அவரிடம் பேசியபோது  “பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரை கொடுக்கும்படி கேட்டேன் காவல்துறையினர் கொடுக்கவில்லை எஃப்ஐஆர் போட்டுள்ளீர்களா என்று கேட்டேன் அதற்கும் இல்லை என்று கூறிவிட்டனர் இதைத் தொடர்ந்து சபாநாயகர் பற்றி அவதூறாக எழுதப்பட்டுள்ளதாகப் புகாரில் தெரிவித்துள்ளதால் விசாரணைக்கு அழைப்பதாகக் காவல்துறையினர் கூறினர் இதற்காக நீங்கள் குற்றவியல் அவதூறு வழக்குதான் போட முடியும் என்று கூறினேன்மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி மற்றும் சிபிஐ-க்கு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அந்த அமைப்புகளின் உத்தரவின்றி சென்னை சைபர் கிரைம் எங்களை அழைப்பது ஏன் அதேபோன்று நக்கீரன் மீதான இதேபோன்ற மற்றொரு வழக்கில் நீதிமன்றமே சில உத்தரவுகளைப் போட்டிருப்பதை சுட்டிக் காட்டினேன் குறிப்பாக ஒரு வழக்கில் ஒருவரை விசாரணைக்கு அழைத்தால் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது ஆனால் அந்த விதிமுறைகள் எதுவும் இந்த சம்மனில் பின்பற்றவில்லை எனவே இந்த சம்மன்  சட்டத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம் செய்து கொடுக்கப்பட்ட சம்மன் இதை திரும்ப  பெற்றுக்கொள்ளுங்கள் மீண்டும் சட்ட விதிமுறைப்படி எங்களை அழைத்தால் நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கூறினோம் நேரில் கூறியதை  அப்படியே கடிதத்திலும் கூறியிருக்கிறோம் இதைக் கேட்டுக்கொண்ட காவல்துறை மீண்டும் அழைப்பதாகக் கூறியுள்ளனர்  என்றார் 

Leave A Reply

Your email address will not be published.