காங்கிரஸ் முன்னிறுத்தும் முஸ்லிம் வேட்பாளர்கள்! பி.ஜே.பி-க்கு எதிரான கொள்கை பிரசாரமா?

0 10

குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி கோயிலுக்குச் சென்றது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது அது இந்தத் தேர்தலில் வேறு விதமாக எதிரொலிக்கிறது காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது அதில் மூன்று தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் விளையாட்டை பிஜேபி-க்கு எதிராக ஆட ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ்இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன ஏறக்குறைய எல்லாக்கட்சிகளும் தங்களின் கூட்டணிகளை உறுதி செய்துள்ளன பிஜேபி ஆளும் மாநிலங்களில் வேட்பாளர்கள் தேர்வில் காங்கிரஸ் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது அங்குள்ள பிஜேபி எதிர்ப்பு வாக்குகளுடன் சிறுபான்மையினரின் வாக்குகளை மொத்தமாக அள்ளுவதே காங்கிரசின் திட்டம் என்பது அதன் வேட்பாளர் பட்டியலிலேயே வெளிப்பட்டுள்ளது குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஹர்திக் படேல் காங்கிரசில் சேர்ந்த பின்பு அக்கட்சிக்கு பெரும் உற்சாகம் கிடைத்துள்ளது  அந்த உற்சாகத்தில் தனது முதல் வேட்பாளர் பட்டியலில் குஜராத்தைச் சேர்த்துள்ளது குஜராத்தில் உள்ள நான்கு தொகுதிகள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 11 தொகுதிகள் என மொத்தம் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்டனர் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியிலும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது அந்தப் பதினைந்து வேட்பாளர் பட்டியலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் அவர்களில் 3 பேர் முஸ்லிம்கள் என்பதுதான் ஏனெனில் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இரண்டு மாநிலங்களும் பிஜேபி ஆட்சியில் உள்ள வலிமை பொருந்திய மாநிலங்களாகும்கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுமைக்கும் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிஜேபி போட்டியிட்டது அவற்றில் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு வெறும் ஏழு தொகுதிகளில் மட்டும்தான் வாய்ப்பு வழங்கப்பட்டது வாய்ப்புகள் பெற்ற அவர்களில் யாரும் வெற்றிபெறவில்லை இந்தியாவின் முதல் முறையாக ஆளும் கட்சியில் ஒரு முஸ்லிம் மக்களவை உறுப்பினர்கூட இல்லாத நாடாளுமன்றம் நடைபெறுவது அமைந்த அதிசயமும் அரங்கேறியதுஅதேபோல் இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் அதிக மக்களைவைத் தொகுதிகள் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள  மாநிலம் உத்தரப்பிரதேசம் ஆகும் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்துக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது இந்தியா முழுமைக்கும் உள்ள மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அதிகப்படியான முஸ்லிம் மக்கள் வசிக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம் ஆனால் அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட நிறுத்தப்படவில்லை தற்போதுள்ள மக்களவையில் காங்கிரஸ் 44 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெறாத நிலையில் தற்போது காஸ்கிரஸ் முஸ்லிம் மக்களவைவை உறுப்பினர்களில் நான்கு பேர் முஸ்லிம்கள் இது கிட்டத்தட்ட மொத்தமுள்ள  காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களில் 10 சதவிகிதமாகும் இவற்றின் அடிப்படையில்தான் காங்கிரஸின் முதல் 15 வேட்பாளர்கள் பட்டியலில் சல்மான் குர்ஷிட் இர்மான் மசூத் சலீம் இக்பால் என மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தது கவனம் பெற்றுள்ளது அதன் பிறகு வெளியிட்ட 21 தொகுதிகளுக்கான பட்டியலிலும் 3 முஸ்லிம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் காங்கிரஸ் இவற்றைத் தன்னுடைய அரசியல் பிரசாரத்துக்கும் பயன்படுத்த முயல்கின்றது சமீபத்தில் நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி ஒரு மொழி ஒரு மதம் என்பது மோடியின் திட்டம் தமிழக மக்கள் அதற்கு இடமளிக்கக் கூடாது” என்றார்பிஜேபி  2014-ம் ஆண்டு வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் கலாசாரம் மற்றும் பாரம்பர்யம் பகுதியில் இடம் பெற்றிருந்தவற்றில் முக்கியமானவை ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்பதாகும் அதேபோல் மற்றொரு முக்கியமான தேர்தல் அறிக்கை காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெறுவது ஆகும் இவை மாதிரியான தேர்தல் அறிக்கைகளும் அரசியல் தீண்டாமைகளும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கும் நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய ஒரு பகுதி மக்களைத் தனிமைப்படுத்தி அதன் மூலம் தங்களின் தேர்தல் வெற்றியைத் தக்க வைப்பதற்கான முயற்சி என்று நடுநிலையாளர்கள் குமுறுகின்றனர்ஆனால் எங்களது கட்சி அப்படிப்பட்ட கட்சியில்லை என்று மீண்டும் ஒரு முறை தேசத்துக்குச் சொல்ல நினைக்கிறது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மையினருக்கு வாய்ப்பு வழங்குவதும் அதிலொரு முயற்சிதான் இந்தியாவின் பன்முகத் தன்மையோடு சிறந்தோங்குவதற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் மக்கள் பிரதிநிதிகள் மக்களவைக்குச் செல்வது அவசியம் ஏனெனில் இந்தியாவின் சிறப்பு அதன் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படுவதில்தான் இருக்கிறது

Leave A Reply

Your email address will not be published.