`20 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் யார் யார்?’ – தயாரான பட்டியல்!

0 8

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக நேரடியாக இருபது தொகுதிகளில் களம்காண உள்ளது மீதி இருபது தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட உள்ளது எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சி போட்டியிடப் போகிறது என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பை திமுக அலுவலகத்தில் இன்று முறைப்படி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்இழுபறியாகிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் தொகுதிகளும் பங்கீடு நடைபெற்று முடிந்ததால் இன்று காலை தொகுதிகள் அறிவிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது திமுக இந்தத் தேர்தலில் திமுக போட்டியிடும் இருபது தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது இந்த நிலையில் திமுக-வின் வேட்பாளர்கள் அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர் அறிவாலயத்துக்கு நெருக்கமானவர்களிடம் நாம் விசாரித்தபோது திமுக தலைமை தயார் செய்து வைத்திருக்கும் வேட்பாளர் பட்டியல்  இதுதான் என்கிறார்கள் தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன் வடசென்னை- மருத்துவர் கலாநிதி மத்திய சென்னை- தயாநிதி மாறன் காஞ்சிபுரம் – செல்லம் அரக்கோணம் -ஜெகத்ரட்சகன் வேலூர் -கதிர் ஆனந்த் திருவண்ணாமலை- அண்ணாத்துரை சேலம்- உமா அல்லது வீரபாண்டி ஆறுமுகம் மகன் பிரபு கடலூர் – டிஆர்விரமேஷ் தர்மபுரி – மணி திண்டுக்கல் – விஜயன் கள்ளக்குறிச்சி- கௌதமசிகாமணி மயிலாடுதுறை – திருவிடைமருதூர் ராமலிங்கம் நீலகிரி- ஆராசா பொள்ளாச்சி – கோகுல்  தஞ்சாவூர் – மகேஷ் தூத்துக்குடி -கனிமொழி நெல்லை- ஞானதிரவியம் ஆகிய 19 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் முடிவு செய்யபட்டுவிட்டது தென்காசி தொகுதியில் மட்டும் இப்போது வேட்பாளர் இறுதி செய்யும் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது ஏற்கெனவே அந்த தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ் கட்சிக்குத் தள்ளிவிடும் ஐடியாவில் திமுக இருந்ததால் அங்கு வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தாமல் இருந்தது இப்போது திமுக வசமே இந்தத் தொகுதி இருப்பதால் வேட்பாளரை இன்றுக்குள் முடிவு செய்துவிடுவார்கள் என்கிறார்கள் 

Leave A Reply

Your email address will not be published.