`பெட்ரோல் நிலையங்களிலுள்ள மோடி படத்தை அகற்றுங்கள்!”  – மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

0 8

பெட்ரோல் பங்குகள் விமான நிலையங்கள் ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் விளம்பர பேனர்களை அகற்ற உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளது இதைத் தொடர்ந்து விளம்பர பேனர்களை இன்று மாலைக்குள் அகற்றுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்கள் மோடியின் உருவம் பிரமாண்டமாக இருக்கும்படி வடிவைக்கப்பட்டுள்ளது இது தேர்தல் நடத்தை விதிமீறல் என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ள காங்கிரஸ் தலைவர் ஆர்பிஎன்சிங் “எங்கள் புகாரைத் தொடர்ந்து மோடியின் விளம்பர பேனர்களை உடனடியாக அகற்றுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது ஆனால் இதுவரையில் பெரும்பாலான பேனர்கள் அகற்றப்படவில்லை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றோம் இன்று மாலைக்குள் பெட்ரோல் பங்குகள் விமான நிலையங்கள் ரயில் நிலையங்களில் உள்ள மோடியின் படங்களை அகற்றுவதோடு அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது இன்று இரவு விளம்பர பேனர்கள் தொடர்பாக விசாரணை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் எங்களிடம் உறுதி அளித்துள்ளது3939 என்றார்தேர்தல் நடத்தை விதிகள் அமலான பிறகு வேட்பாளர்களின் முகம் தெரியும்படி செய்யப்படும் விளம்பரங்கள் அந்தந்த வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் வேட்பாளர் அரசுப் பதவியில் உள்ளபட்சத்தில் அவரது முகத்தை அரசு விளம்பரங்களில் பயன்படுத்தக் கூடாது இந்த விதியை மீறியதாகத்தான் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளது தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து இன்று மாலைக்குள் பெட்ரோல் நிலையங்களில் மின்னும் மோடியின் படங்கள் அகற்றப்படலாம்

Leave A Reply

Your email address will not be published.