வார்னர், ஸ்மித் ரிட்டன்ஸ்; உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

0 7

இங்கிலாந்து மண்ணில் உலகக்கோப்பை தொடர் மே மாதம் தொடங்கவுள்ளது இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5-வது உலகக்கோப்பைத் தொடர் இதுவாகும் இந்தத் தொடருக்கான அணிகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது அனைவருக்கும் தங்கள் நாட்டின் அணி தொடர்பான எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு உலக கவனம் பெற்றுள்ளது அதற்கு முக்கிய காரணம் தடையில் இருக்கும் வார்னர் மற்றும் ஸ்மித் அணிக்குத் திரும்புவார்களா என்ற கேள்விதான் இந்தக் கேள்விக்கான விடை இன்று கிடைத்துவிட்டது ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது வார்னர் மற்றும் ஸ்மித் அணிக்குத் திரும்புகின்றனர் இது தொடர்பாகப் பேசிய ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ட்ரேவோர் ஹோன்ஸ்  “டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்குத் திரும்புகின்றனர் இரண்டு பேரும் உலகத்தர வீரர்கள் என்பதில் சந்தேகம் இல்லை அவர்கள் ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் விளையாடி வருவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார் இவர்கள் இருவரின் வருகையால் இந்தியத் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் ஹேண்ட்ஸ்கோம்ப் அணியில் தனது இடத்தைத் தக்கவைக்க முடியவில்லை உஸ்மான் கவாஜா அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் நடுவரிசையில் ஷான் மார்ஷ் மேக்ஸ்வல் உள்ளனர் பந்துவீச்சைப் பொறுத்தவரை பேட் கம்மின்ஸ் ஸ்டார்க் ரிச்சர்ட்சன் நாதன் கவுல்டர் நைல் பெகண்ட்ரோஃப் ஆகிய ஐவர் படை வேகப்பந்துவீச்சையும் நாதன் லயன் மற்றும் ஆடம் சம்பா சுழற்பந்து வீச்சையும் கவனித்துக் கொள்ளவுள்ளனர் Photo Twitter@cricketcomauஇந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி சரியான நேரத்தில் ஆஸ்திரேலிய அணி ஃபார்முக்கு வந்துள்ளதாகக் கூறிவரும் நிலையில் ஸ்மித் மற்றும் வார்னர் வருகை அந்த அணிக்கு அதிக உற்சாகம் அளிக்கக் கூடியதாக இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணிபின்ச் (கேப்டன்) வார்னர் ஸ்மித் அலெக்ஸ் கேரி உஸ்மான் கவாஜா ஷான் மார்ஷ் மேக்ஸ்வெல் மார்கஸ் ஸ்டோனிஸ் பேட் கம்மின்ஸ் ஸ்டார்க் ரிச்சர்ட்சன் நாதன் கவுல்டர் நைல் பெகண்ட்ரோஃப்  நாதன் லயன் ஆடம் சம்பா 

Leave A Reply

Your email address will not be published.